ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் டெலிவரி கவுன்டரில் வழங்கிய சூடான டீ கொட்டியதில், இடுப்பு பகுதியில் காயமடைந்தவருக்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் என்ற, உலகம் முழுவதும் பரவியுள்ள பிரபலமான காபி நிறுவனத்தில், மைக்கேல் கார்சியா என்ற டெலிவரி டிரைவர் டீ வாங்கினார். அந்த டீயை அவர் வாங்கிய போது, அங்கிருந்த ஊழியர் கன்டெய்னர் மூடியை சரியாக மூடாமல் கொடுத்தார்.
அதை அறியாமல் வாங்கிய கார்சியாவின் இடுப்பு பகுதியில் சூடான டீ கொட்டியது. இதில், அவரின் இடுப்பு பகுதியில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.
அதற்கு இழப்பீடு கேட்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து, 1492 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனம், ‘சாதாரண காயத்திற்கு, 1492 கோடி ரூபாய் இழப்பீடா…’ என கூறி, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.