லீவு மறுப்பு:திருக்கோயிலில் துப்பாக்கி சூடு 4பொலிசார் பலி

shot from a handgun with fire and smoke
( கனகராசா சரவணன்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபொலிஸ் உத்தியோகத்தர்தப்பி ஓடிய நிலையில் மொனராகலையில்வைத்து கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையை சேர்ந்தபொலிஸ் உத்தியோகத்தர் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் லீவு கோரியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம லீவு வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 படுகாயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபொலிஸ் உத்தியோகத்தர்அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில்  அத்திமலை  பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்
சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது
Previous Story

வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள்  கவனத்திற்கு.!

Next Story

பயனுள்ள தகவலை மட்டும் கொடுங்கள்!