-நஜீப்-
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
நமது நாட்டில் இன்று பெரும் பேசுபெருளாகி வருகின்ற ஒரு கதை-வழக்கு உலக அதிசப் பட்டியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராஜாக்கள் அதிகாரத்தில் இருந்த நாட்களில் தேசிய ஆச்சி-விக்கிரமசிங்ஹ என்பவர் வீட்டுவிராந்தை யாரோ ஒரு பொதியை வைத்து விட்டு போயிருக்கின்றார்கள். பொதியைத் திறந்தால் அதில் வைரக்கற்கள்.!
அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதேபாட்டி வீட்டுக்கு வந்த வேறு சிலர் அந்த வைரப்பெதியை வங்கிக்கொண்டு அதற்கு கோடிக்கணக்கில் காசு கொடுத்தார்களாம். ஆச்சர்யம் பொதி வைத்திவர்களையும் பின்பு வந்து காசு கொடுத்து பொதியை எடுத்துப்போனவர் என்ற எவரையும் இந்த பாட்டிக்குத் தெரியாதாம்.
கடவுளே! என்னடா இந்தக் கதை? நீ வாய் பேசாத ஆள் என்பதால்தானே இந்த ஆட்டங்கள் இங்கு.? இந்தப் பின்னணியில் ராஜாக்களின் புதல்வர்கள் ஆட்டங்கள், நாடகங்கள்.? சட்டம் நீதி அனுர ஆட்சியிலும் உறங்கிவிடுமா?
குறிப்பிட்ட பாட்டிக்கு இப்போது வயது 90ஆம். அவர்பற்றித் தேடிப்பார்த்தால் மஹிந்த மனைவி சிரந்தியின் உறவுக்காரி. கொழும்பு-சுலைமான் வார்ட், மற்றும் புனித.தோமஸ் கல்லூரில் ஆகியவற்றில் மேட்டன் வேலைதான் இவர் பார்த்த தொழில். அப்போது பாட்டி வாங்கிய மாத சம்பளம் இருநூற்றி ஐம்பது (250) ரூபா. மட்டுமே. அப்போ…!