வாராந்த அரசியல்! 19.01.2024

பட்ஜெட்டில் அரசுக்கு நெருக்கடி!

நஜீப்

நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்

என்பிபி. அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் மிக விரைவில் முன்வைக்கப்பட இருக்கின்றது. இது ஒரு இடைக்கால முன்மொழிவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பொரும் ஆர்வத்துடன்  அவதானிக்கப்பட்டு வருகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் இதற்குத் தமது ஆலோசனைகளை வழங்க ஒரு குழுவை நியமனம் செய்திருக்கின்றார்.

இதன் மூலம் நல்ல ஆலோசனைகளை வழங்குவது தனது திட்டம் என்று அவர் குறிப்பிடுகின்றார். அதே நேரம் அரசுக்கு எதிரான சில ஊடகங்கள் தற்போது அரசு அதிக சலுகைகளை மக்களுக்கு வழங்க இருக்கின்றது.

பெரும் தொகையான சம்பள அதிகரிப்பு என்றெல்லாம் அவை கணக்குகளையும் சொல்லி வருகின்றன. இப்படி மிகைப் பட்ட நம்பிக்கைகளை மக்களுக்கு கொடுத்து அரசு வரவு செலவுத்திட்டங்களை சமர்ப்பிக்கின்ற போது அப்படி நடக்காமல் போகும் போது அரசு தம்மை ஏமாற்றி விட்டது என்று பொது மக்களும் அரசை விமர்சனம் செய்து ஆட்சியாளர்களுக்கு கெட்ட பெயரை உண்டு பண்ணுவதுதான் இதன் நோக்கமாக இருக்கின்றது.

எனவே பதவியில் இருக்கின்றவர்கள் தமது எதிரிகள் மேற்கொள்ளும் இந்த யுக்திகளைப் புரிந்து கொள்ள கொண்டு அதற்குப் பதில் கொடுக்க வேண்டும்

2

ரணில் சஜித்துக்கு நேசக்கரம்!

நஜீப்

நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்

தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற அனுர தலைமையிலான அணி நாடாளுமன்றத்தில் மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றது. அதே நேரம் சஜித் தலைமையிலான எதிர்க் கட்சிகள் மிகவும் பலயீனமாக இருப்பதும் தெரிந்ததே.

இந்த அணியில் இருக்கின்ற பல கட்சிகள் ஏற்கெனவே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்க இருப்பதை உறுதி செய்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் மீண்டும் சஜித் தலைமையிலான ஐமச.யும் ரணில் தலைமையிலான ஐதேக.வும் இணைந்து தேர்தலில் நிற்பது பற்றி இருதரப்பும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தலதா ஐதேக. செயலாளராக வந்த பின்னர் இது உத்வேகம் பெற்றிருக்கின்றது. ரணில் தலைமைத்துவம் பற்றி பின்னர் முடிவு செய்யலாம். முதலில் கூட்டணி சமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று சஜித்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

ஆனால் இது விடயத்தில் சஜித் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிகின்றது. கூட்டணி போட்டு கூடராத்துக்குல் புகுந்து தன்னை ரணில் வெளியேற்றிவிடுவார் என்று சஜித் அஞ்சுகின்றார் போலும்.

3

வித்தியாசமான ஒரு தகவல்!

நஜீப்

நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்

நாம் சொல்கின்ற இந்தக் கதை சற்று வித்தியாசமான ஒரு தகவலாக இருந்தாலும் நமது அரசியல் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பிரதிபளிக்கின்றது. அதனால்தான் இதனை இந்தப் பகுதியில் பேசுகின்றோம். நாடு வங்குரோத்து என அறிவிப்புச் செய்யப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது.

இதற்கு உல்லாசப்பிரயாணத்துறை கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றது. சில தினங்களுக்கு முன்னர் நமது ரயில் டிக்கட் விற்பனையிலும் இப்படி ஒரு மோசடி-அட்டகாசம் நடப்பது கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் லால் காந்த சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

புகழ் பெற்ற பதுள்ள-எல்லவுக்கு ரயில் மூலம் அதிகளவான உல்லாசப் பயணிகள் விஜயம் செய்கின்றனர். அதற்கான  ஈ டிக்கட ஒரு மாதங்களுக்கு முன்னர் ஒன்லை மூலம் விற்பணைக்கு விடப்படுகின்றன.

இரண்டாயிரம் (2000) ரூபா பொறுமதியான டிக்கட் விற்பணைக்கு வந்து 45 நிமிடங்களில் விற்பணையாகி விடுகின்றன. பின்னர் அவை கள்ளச் சந்தையில் 15000-20000 ஆயிரம் ரூபா என்ற அளவில்  கொழும்பு எல்ல கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஊடாக விற்கப்படுகின்றது.

4

பேசு பொருளான கூட்டுறவு தேர்தல்!

நஜீப்

நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்

கடந்த ஜனாதிபதி-பொதுத் தேர்தலுக்கு முன்னர் அனுர தரப்பு கூட்டுறவுச் தேர்தல்களில் தமக்குக் கிடைத்த வெற்றியை பேசு பொருளாக்கியது. சில தினங்களுக்கு முன்னர் நடந்த கூட்டுறவுத் தேர்தலில் என்பிபி.க்கு சஜித் தரப்பு  சவால் விடுகின்றது.

அதில் சில இடங்களில் அவர்கள் பொதுக் கூட்டணி போட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் ஹோமகம தொகுதியை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று என்பிபி.ஜெயித்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டுறவுத் தேர்தலில் ஹோமகமவை சஜித் அணி ஜெயித்திருக்கின்றது.

இதனை அவர்கள் ஒரு பேசு பொருளாக எடுத்திருக்கின்றனர். இந்தத் தேர்தலில் ஹோமாகமவை உதாரணமாகப் பார்த்தால் அங்கு வாக்காளர் எப்படி தெரிவாகின்றார்கள் என்றால், கூட்டுறவில் கடன் வாங்கியவர்கள்

அல்லது நூறு ரூபாய் சந்தாப் பணம் செலுத்தி உறுப்பு உரிமையைப் பெற்றவர்கள். இதில் ஹோமகம-கொட்டாவை என்ற இடத்தில் கூட்டுறவில் வாக்காளர் 4000 பேர் வரை. வாக்களிக்க வந்தவர்கள் 295 பேர். வேட்பாளர்கள் 18 பேர் என்றாலும் இது இன்று பேசு பொருளாகி வருகின்றது.

Previous Story

காஸாவில் அமைதி: உணர்ச்சிமிகு தருணங்கள்!

Next Story

ரஷ்யா - இரான் புதிய ஒப்பந்தங்கள்!