-நஜீப்-
நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல்
வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சஜித்தை கைவிட்டுத் தனித்துக் களத்தில் இறங்க சிறுபான்மைக் காட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. திகாம்பரம், மனோ கணேசன், ராத கிருஸ்ணன் இது விடயத்தில் தீர்மானத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது.
அதே போன்று முஸ்லிம் தனித்துவ அரசியல் காட்சிகளும் இந்தத் தேர்தலில் சஜித்துக்கு ஆப்பு வைத்து தனித்து களமிறங்கினால்தான் தமக்கு ஆரோக்கியம் என்று நம்புகின்றன. இதனை நாம் கடந்த சில வாரங்களாக சொல்லி வந்திருக்கின்றோம்.
தெற்கில் ஆளும் அனுர தரப்புக்கு அதிக வாய்ப்புக்கள் என்பதுதான் நமது கருத்து. ஆனால் இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் என்பிபி. அதிக ஆர்வம் செலுத்த இருப்பதாக தெரிகின்றது.
வடக்குக் கிழக்கில் இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல அவர்கள் எதிர்பார்ப்பது போலத் தெரிகின்றது.
வடக்கு கிழக்கில் அதிகமான கட்சிகள் களத்துக்கு வருவதால் அதில் நல்ல அறுவடைகள் அனுர தரப்புக்குத்தான் கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம்.