கூட்டணியில் இருந்து பல்டி!

-நஜீப்-

நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பொதுத் தேர்தலும் நடந்து விட்டது. கட்சிகளை நடாத்துகின்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதற்குத்தான் அவர்களுக்கு கூட்டணிகள் தேவைப்பட்டது.

குறிப்பாக தனித்துவம் என்று சமூக உணர்வுகளைத் பேசுகின்றவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற தலைவருடன் நல்லுறவு தேவை. எனவே அவர்கள் தமது இலக்கை அடைந்து விட்டார்கள் அல்லது தவறிவிட்டார்கள்.

இப்போது சஜித் கூட்டணியில் இருந்து வெளியேறி, வருகின்ற தேர்தல்களில் தமது தனித்துவக் கட்சி ஊடக உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு வேட்பாளர்களைக் களமிறக்குகின்ற கலந்தாலோசனைகளை அவர்கள் நடத்தி வருகின்றார்கள்.

அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் சொந்தக் கட்சியில் களத்தில் இறங்கினால் அதிக நண்மைகள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

சஜித் அணியில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் மண்கௌவியதால் தனித்துவத்தார்கள் அங்கு கட்சி வளர்க்க இது நல்ல வாய்ப்பு என்று தமது ஆதரவாலர்களிடம் கூறி வருவதாகவும் ஒரு தகவல்.

Previous Story

வரும் அமர்விலும் அதிரடி!

Next Story

இலங்கை:  இந்தியா, சீனாவின் செல்வாக்கு