வரும் அமர்விலும் அதிரடி!

-நஜீப்-

நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல்

வருகின்ற 2025 ஜனவாரி ஏழாம் (7) திகதி மற்றுமொரு நாடாளுமன்ற அமர்வு நடக்க இருப்பது தெரிந்ததே. அந்த அமர்வின் போது மற்றுமொரு கொள்ளை அம்பலமாக இருக்கின்றது என்று தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அதன்படி ரணில் ஜனாதிபதியாக இருந்த போது  கடவுச் சீட்டு மோசடியில் நடந்த மிகப் பெரிய கொள்ளை பற்றிய தகவல்கள்; வெளியே வர இருப்பதாக தெரிகின்றது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி நிதியத்தில் அரசியல்வாதிகள் செய்திருந்த அட்டகாசங்கள்-அசிங்கங்கள் பகல் கொள்ளை வெளியே வந்தது போலத்தான் இதுவும் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

கடவுச் சீட்டு விவகாரத்தில் புதிய முறை மற்றும் தட்டுப்பாடுகளை உண்டு பண்ணி துறைக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் இந்த கொள்ளைகளை மேற்கொண்டதாகத் தெரிகின்றது.

அரச கணக்காய்வகம் வழங்கி இருக்கின்ற தகவல்கள் அரச தரப்பால் இந்த அமர்வில் போது முன்வைக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

 

Previous Story

திக்திக்: நள்ளிரவில் இஸ்ரேல் போட்ட திட்டம்! 

Next Story

கூட்டணியில் இருந்து பல்டி!