ரஷ்ய தளபதி படுகொலை:புடின் பதிலடி! 

உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், இந்தத் தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்(Moscow) மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.

மின்சாரம் துண்டிப்பு

அத்துடன், அவருடன் இருந்த இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் துணை அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தார்.

ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின் | Putin Action Against Assassination Of Commander

இதற்கு பதிலளிக்கும் விதமாக கீவ் நகரில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு குடியிருப்பு வளாகங்களுக்குள் தீ பரவியுள்ளது.

ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின் | Putin Action Against Assassination Of Commander

இந்நிலையில், 630 குடியிருப்பு கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெப்பமூட்ட முடியாமல் உள்ளனர்.

Previous Story

ஜனாதிபதியை படுகொலை செய்ய நடந்தசதி குறித்து விசாரணை

Next Story

"13 குறித்து இந்தியாவுடன் பேசும் தேவை வரவில்லை"