-நஜீப்-
நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பவற்றுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே அனைத்து அணுர எதிர்ப்பாளர்கள் அல்லது ஜேவிபி-என்பிபி எதிர்ப்பாளர்கள் ஒரு மெகா கூட்டணிக்குப் போனால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்று நாம் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தோம்.
அல்லது நாம் கூறிய படி முன்கூட்டி பொதுத் தேர்தல் நடந்திருந்தால் இந்த நிலை வந்திருக்க மாட்டாது என்பது நமது வாதம். இன்று நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் அணுர அலை மேலோங்கி இருக்கின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் வருமாக இருந்தால் தெற்கில் மட்டுமல்ல வடக்குக் கிழக்கில் கூட ஆதிக்கத்தை அணுர தரப்புக் கைப்பற்ற இடமிருக்கின்றது. எனவே ஜனாதிபதி அணுர தரப்புக்கு எதிராக தமிழ் தரப்பினர் ஒரு பலப்பரீட்சையை நடத்துவதாக இருந்தால் அங்குள்ள அனைத்துத் தமிழ் தரப்பினரும் ஒரு மெகா கூட்டணிக்குப் போக வேண்டி வரும்.
அல்லது உள்ளூராட்சி மன்றங்களை மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணசபைகள் கூட அணுர அணி கைப்பற்றி விடும். இதற்கிடையில் ஆளும் தரப்பு வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரன் என்றும் ஒரு கதை சந்தைக்கு விடப்பட்டிருக்கின்றது. அப்படி எதுவும் கிடையாது அவ்வளவுதான்.!