-நஜீப்-
நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல்
தற்போதய சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வெல. தேர்தல் பரப்புரைகளில் கூட பேராசிரியர் என்றுதான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிகின்ற போது கூட பிரதமர் ஹருணி பேராசிரியர் ரன்வெல என்றுதான் விழித்திருந்தார்.
ஆனால் இது விடயத்தில் இதுவரை சர்ச்சைக்குரிய ரன்வெல கலாநிதிப் பதவிக்கு விளக்கம் எதனையும் கொடுக்கவில்லை. ஆனால் அவரது மகள் டாக்டர் பவணி ரன்வெல தந்தைக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக உறுதி செய்கின்றாள். தந்தை விரைவில் பதில் கொடுப்பார் என்று அவர் கூறுகின்றார்.
சபாநாயாகர் மனைவி மகள் மகன் என்ற மூவரும் வைத்தியர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் (மும்தாஸ் மஹால்) குடியேரவோ அரச வாகனங்கள் எதனையும் பாவிக்காது தமது பியகம வீட்டில் இருந்து சொந்த வாகனத்தில் கடமைகளுக்குச் சொன்று வருவதாகவும் தெரிகின்றது.
நமது நாட்டில் காசு கொடுத்து கலாநிதி பட்டத்தை வாங்க கடைகள் இருப்பதும் தெரிந்ததே. அந்த நிலைக்கு அவர் போய் இருப்பார் என்று நாம் நம்பவில்லை. அத்துடன் சபாநாயகர் பதவிக்கு பட்டம் அவசியமில்லை.
எல்ரிரி. ஆலோசகர் அன்டன் பலசிங்கத்துக்கு முன்னால் கலாநிதி என்று இருக்கின்றது. ஆனால் அவர் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்யவில்லை. இதுவும் அப்படியா?