முஸ்லிம்கள் நுழைய தடை விதித்துள்ள ஒரே நாடு

மர்மதேசமாக அறியப்படும் வடகொரியாவில் வித்தியாசமான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதை நாம் அறிந்து இருப்போம். ஆனால் அங்கு முஸ்லிம்கள் நுழைய தடை உள்ளது? என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

ஏன் இந்த தடை? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். உலகில் உள்ள மக்களில் அதிகமானவர்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இஸ்லாம் மதம் உள்ளது.

உலகளவில் சுமார் 2 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). அப்படி பார்த்தால் மொத்தம் 200 கோடி பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

North Korean troops sent to Russia may be pleased to be there, even as they face ferocious fighting | NEWS10 ABC

மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து பார்த்தால் தென்ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை குறைந்த அளவிலும், இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியர்கள் இல்லாத நிலையும் உள்ளது.

இப்படி இஸ்லாமியர்கள் இல்லாத நாடுகளில் கூட அங்கு அவர்கள் சென்று வர அனுமதி என்பது உள்ளது. பல்டியடித்த புதின்? சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ராஜினாமா செய்தது ஏன்? ரஷ்யா சொன்ன தகவல் ஆனால் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும்தான் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் இஸ்லாம் பற்றி பரப்புரை மேற்கொண்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எந்த நாடு என்று நாம் பார்த்தால் வடகொரியா. வடகொரியாவில் தற்போது அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவர் சர்வாதிகாரியாக அறியப்படுகிறார்.

North Korea gives unprecedented welcome to Moon

வடகொரியா மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஹேர் ஸ்டைல் முதல் பயன்படுத்தும் செல்போன், பார்க்கும் டிவி சேனல் என்று அனைத்தையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நாடு அளவில் மிகவும் சிறியது. வடகொரியாவில் மொத்தம் 2 கோடியே 60 லட்சம் மக்கள் தான் உள்ளனர். இப்படி குட்டி நாடாக இருந்தாலும் கூட வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா அபாயகரமான நாடாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவை கூட அவ்வப்போது அலறவிட்டு வருகிறது இந்த குட்டி வடகொரியா.

China-Russia-Iran-North Korea axis heightens the risk of WWIII - Nikkei Asia

இந்த வடகொரியாவில் இஸ்லாமியர்கள் நுழைய தடை உள்ளது பற்றி இப்போது பார்க்கலாம். பொதுவாக வடகொரியா என்பது கம்யூனிச நாடாகவும், அங்குள்ள நாத்திக அரசாகவும் (கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு) அறியப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களில் 64.3 சதவீதம் பேர் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை.

அதேவேளையில் அங்குள்ள மக்கள் நினைத்தால் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமை மட்டும் எப்படியோ மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மதத்தை பின்பற்ற முக்கிய கட்டுப்பாடு உள்ளது. நாட்டில் ஒற்றுமை சீர்குலைய கூடாது என்ற நிபந்தனை தான் அது. அதன்படி பார்த்தால் வடகொரியாவில் 16 சதவீத மக்கள் ஷாமனிசம் (Shamanism) மதத்தை பின்பற்றுகின்றனர்.

இதற்கு அடுத்தப்படியாக சோங்கியோனிசத்தை (Chongryonism) 13 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கொரிய ஷாமனிசம் என்பது வடகொரியாவின் பழமையான மதமாக உள்ளது.

Iran, North Korea think they can become nuclear powers without obstacle - The Jerusalem Post

சோங்கியோனிசம் என்பது ஜப்பானில் வசிக்கும் கொரிய மக்களின் பொது சங்கமான சோங்கியோனின் கொள்கையை பின்பற்றுவோரை குறிக்கும். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட அரசு என்று சொன்னாலும் கூட மதம் என்று வந்தால் இந்த கொரிய ஷாமனிசம் மற்றும் சோங்கியோனிசத்தை தான் வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தீவிரமாக ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர புத்தமதம், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் குறைந்த அளவில் உள்ளனர். புத்த மதத்தை 4.5 சதவீத மக்களும், கிறிஸ்தவ மதத்தை 1.7 சதவீத மக்களும் பின்பற்றுகின்றனர். இஸ்லாம் மதத்தை எடுத்து கொண்டால் 2010ம் ஆண்டின் நிலவரப்படி மொத்தம் 3,000 முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் பொதுவாகவே வடகொரியாவில் பிற நாட்டை சேர்ந்தவர்கள் நுழைய தடை உள்ளது. இருப்பினும் சில கட்டுபாடுகளை பின்பற்றினால் வடகொரியாவுக்குள் சென்று விடலாம். ஆனால் வடகொரியாவில் இஸ்லாமியர்கள் செல்ல தடை என்பது உள்ளதாம்.

அதாவது வடகொரியாவில் வெளிநாட்டு சக்திகளை அனுமதிக்க கூடாது என்பதில் அந்த நாட்டு அரசு கண்டிப்புடன் உள்ளது. அந்த வகையில் தான் முஸ்லிம்கள் நுழைய தடை என்பது உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தூதரக பணியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது. மேலும் இஸ்லாமியர்களை பொறுத்தமட்டில் தினசரி தொழுகை என்பது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.

Iran Build’s Pyongyang’s First Mosque

ஆனால் வடகொரியாவில் இஸ்லாமியர்களுக்கு தனியாக மசூதி என்பது கிடையாது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ஈரானிய தூதராக வளாகத்திற்குள் ஒரே ஒரு மசூதி மட்டுமே அமைந்துள்ளது. இதனையும் அங்கு வளாகத்திற்குள் வசிக்கும் ஈரானியர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

NATO vs Russia China Iran North Korea military power 2023 | NATO vs Russia | world military power

பொதுவாக ஈரான் மற்றும் வடகொரியா இடையே காலம் காலமாக நல்ல உறவு உள்ளது. ஈரானை பொறுத்தவரை ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தான் அதிகம். அவர்கள் தான் பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் பணியில் உள்ளனர். இதனால் ஈரான் கோரிக்கையை ஏற்று தான் அங்கு ஒரு மசூதி மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மசூதியில் மட்டுமே தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் தொழுகை நடத்துகின்றனர்.

r/shia - There's a Shia Mosque in Pyongyang, North Korea

இங்கு வெள்ளி கிழமைக்கான சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டு வருகிறது. வடகொரியாவில் எகிப்து, பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட நாடுகளின் தூதரங்கள் உள்ளன. இருப்பினும் அவர்கள் சார்பில் மசூதி என்பது அமைக்க இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. தற்போது ஷியா மசூதி மட்டுமே அந்த நாட்டில் உள்ளது. சன்னி பிரிவு மசூதி என்பது இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Previous Story

'ஆட்களை துவைக்கும் இயந்திரம்'

Next Story

2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் மனுக்கள் இரத்து !