இரத்தினக்கல் அதிகாரசபை மாதாந்த வாடகை 5 மில்லியன்!

வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 லட்சம்!

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் மாதாந்த வாடகை 5 மில்லியன் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் வாடகைக்கே உள்ளன. இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் மாத வாடகை 5 மில்லியன்.

வர்த்தக அமைச்சகத்தின் மாத வாடகை 65 லட்சம். அவற்றை அரசு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

Previous Story

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்: ரூ.280,000 கோடி சொத்து!

Next Story

RANIL: BAR LIST 2024 பெயர் முகவரி சகிதம்!