நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள்  மீண்டும் சர்ச்சை!

படித்திருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவுக்கு அறிவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அர்ச்சுனாவுக்கு எதிராக நடவடிக்கை

இன்றைய அமர்வின் போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, “கடந்த 21ஆம் திகதி முதன் முதலாக நாடாளுமன்றம் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் அமர்ந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், ஹேஷா விதானகே உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “தான் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் அமர்ந்த விவகாரம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை | Archchuna Ramanathan Parliament Speech

அத்துடன், இந்த உயரிய சபைக்குள்ளேயே இப்படி நடக்குமானால் நான் எவ்வாறு வீதியில் செல்வது” என்றும் கேள்வி எழுப்பிய அவர் தான் ஒரு வைத்தியர் என்பதையும் அழுத்திக் கூறினார்.

இதனையடுத்து, உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, “யாழ்ப்பாணத்தில் இருந்து சுயேட்சை குழு ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா. இவர் எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்திற்கு வந்து செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். இது சம்பந்தமாக நாங்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.

சிலர் படித்திருந்தாலும் அவர்களுக்கு அறிவில்லை. இதற்குரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். எதிர்க்கட்சியினருக்குரிய ஆசனங்களில் அவரை அமர வைக்க வேண்டாம். வேறு எங்காவது அமர வையுங்கள்” என்று கோரிக்கை முன்வைத்தார்.

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை | Archchuna Ramanathan Parliament Speech

இதனையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “இன்று மதியம் 2.30 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேசுமாறு என்னை நிர்ப்பந்தித்திருந்தார்கள். எனவே நான் அங்கு சென்றிருந்தேன். அவருடன் கலந்துரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கேட்பதற்கு சுஜித் என்பவருடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர் என்னைத் தாக்கினார். சுஜித் என்பவர் என்னைத் தாக்கினார். அவர் என் தந்தையின் வயதையுடையவர். இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும். அதனால் நான் அவரை தாக்கவில்லை” என குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

Previous Story

புதிய  அமைச்சர்களுக்கான வாகனங்கள்

Next Story

சிரியா போரில் நண்பனுக்காக களமிறங்கிய புதின்!