ரணில் மீது ரவி கருணாநாயக்க பாரிய குற்றச்சாட் டு !

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இயங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போதைய பிரதமர் ரணிலின் கீழ் மத்திய வங்கி இயங்கியதுடன் அரச வங்கிகள் கபீர் ஹாசீமின் கீழ் இயங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் குற்றச்சாட்டு

இவ்வாறான ஓர் பின்னணியில் தொடர்பு இல்லாத தம்மீது மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் மீது பாரிய குற்றச்சாட்டை சுமத்தும் ரவி கருணாநாயக்க | I Dont Make Any Mistakes In Bond Scam

தாம் ஓர் பட்டயக் கணக்காளர் எனவும் வயிற்றுப் பிழைப்பிற்காக தாம் அரசியல் செய்யவில்லை எனவும் உண்மையில் குற்றம் இழைத்திருந்தால் இவ்வாறு இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தாம் தெரிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறந்த முறையில் பணியாற்றிய போது அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகத் குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

அதிர்ச்சி: மருத்துவர் ஷாபிக்கு எதிராக போலி முறைப்பாடுகளை தயாரித்த பொலிஸார்! ​

Next Story

புதிய  அமைச்சர்களுக்கான வாகனங்கள்