1977க்கு முன்னய நிலை நாட்டில்!

-நஜீப்-

நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்

இந்த நாட்டில் ஜேஆர். அதிகாரத்துக்கு வரும் முன்னர் ஒரு சுமூகமான அரசியல் சூழ்நிலைதான் நாட்டில் இருந்து வந்தது. ஜெயவர்தன ஆட்சிதான் இந்த நாட்டின் சாபக்கேட்டின் துவக்கமாக அமைந்த்தது.

தனது கட்சியை காலம் முழுவதும் அதிகாரத்தில் வைத்திருக்கும் நோக்கில் ஜே.ஆர். உருவாக்கிய (1978) புதிய அரசியல் யாப்பு மிதமிஞ்சிய அதிகாரங்களைக் கொண்டிருந்தது. ஒரு ஆணைப் பெண்ணாக்கவும் பெண்னை ஆணாக்கவும் மட்டுமே தனக்கு முடியாது என்று ஒரு முறை அவர் சுட்டிக் காட்டி இருந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

ஆனால் இந்த யாப்பில் அதி உச்ச இலாபங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் ராஜபக்ஸாக்கள்தான். அதே வேலையில் அது அவர்களின் அழிவாகவும் அமைந்தது. இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கின்ற அணுர தலைமையிலான ஜேவிபி-என்பிபி. தலைமையிலான அரசு 1977 க்கு முன்னிருந்த ஒரு சுமுகமான நிலைக்கு நாட்டை கொண்டு செல்வதுதான் புதிய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்து பிரதேசங்களில் இருந்தும் அதற்கான மக்கள் அங்கிகாரம் கிடைத்திருக்கின்றது.

Previous Story

இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்'

Next Story

அமைச்சுக்களும் நியமனங்களும்!