உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) (இலங்கை ரூபாய் மதிப்பு 49.312 லட்சம் கோடி) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க்.
இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) (இலங்கை மதிப்பு 223244 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக ட்விட் செய்துள்ளார்