ஜனாதிபதி அணுர மீதான ஈர்ப்பு: இனவாத அரசியல் கோட்டைகள் தகர்ந்தன!

வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும்
அரசியல் வியாபாரிகள்-டீல்காரர்களுக்கு மரண அடி!

உலக வரலாற்றில் முதல் முறையாக இந்த நாட்டில் புள்ளடியால் நிகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியானது புதியதோர் அரசியல் பாரம்பரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த விடயத்தில் குறிப்பாக ஜேவிபி-என்பிபி.யின் தற்போதய தலைவர் அணுர குமார திசாநாயக்க ஆளுமை இதற்கு முக்கியமான காரணமாக காணப்படுகின்றது. அத்துடன் அந்த அமைப்பில் தியாகமும் செயல்பாடுகளும் இந்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றன.

Tamil Guardian on X: "Douglas Devananda, the leader of government aligned paramilitary EPDP, which has a long history of rights abuses, is currently Sri Lanka's Fisheries & Aquatic Resources Minister. In 2012,

இதற்கு நல்ல உதாரணம் தெற்கில் இனவாதிகள் காணாமல் போய் இருக்கின்றார்கள். நேற்று தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற வன்னியிலும் யாழிலும் நடந்த பிராமாண்டமான கூட்டங்கள் மற்றும் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழ்கின்ற அம்பாறை திகாமடுல்லை மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் இனவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கப் போவதை உறுதி செய்தி கொண்டிருக்கின்றன.

Hakeem's Hypocrisy – Q&A | ThinkWorth

இதனால் அரசியல் வியாபாரிகள்-டீல்காரர்கள் நிலை குழைந்து நடுக்கத்தில் இருக்கின்றார்கள். தமது அரசியல் இருப்பை எப்படியாவது உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த நயவஞ்சகர்கள் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள். கண்டிப் பக்கத்தில் ஒரு தனித்துவத் தலைவர் தனது வெற்றிக்காக பணத்தை கொட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஒரு நாளைக்கு கொன்வெசின் போவோருக்கு அதிகூடிய ரெட்டாக அவர் 5000 கொடுத்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கடியான நிலையில் பிழைப்புக்காக அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்ற குடி மக்களை நாம் ஒரு போதும் குறை காணமுடியாது.

ஆனால் அவர்களின் வாக்குகளும் அனுர அணிக்குத்தான் என்பது இந்த அரசியல் ஏமாற்றுக் காரர்களுக்கு – நாயவஞ்சகர்களுக்கு வருகின்ற 14ம் திகதி தெரியவரும்.

Previous Story

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் 

Next Story

SJB-SLMC கூட்டணி முறிந்தது!