தனது இயலாமையை சரி செய்யும் ஒரு அரசியல் இராஜதந்திரமாக ஹிஸ்புல்லாஹ்வை தன்னுடன் இணைத்துக் கொண்டாலும் அவர் இந்த முறை நாடாளுமன்றம் வந்து விடக்கூடாது என்ற விடயத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்தி வருகின்றார்.
மட்டக்களப்பில் இருக்கின்ற ஐந்து ஆசனங்களுக்கு பலம்வாய்ந்த தமிழ் தரப்புக்கள் போட்டியிடுகின்றன. இதற்கிடையில் அதிகாரத்தில் இருக்கும் அனுர தரப்பும் களத்தில் நிற்கின்றன. இந்த நிலையில் ரிசாட் தரப்பும் அங்கே நிற்கின்றது.
இந்தப் பின்னணியில் தாமும் சஜித் அணியில் போட்டியிடுவோம் என்று ஹிஸ்புல்லாஹ் ஹக்கீமைக் கெஞ்சிப்பார்த்தார். நடக்கவில்லை. தலைவரிடம் சொல்லி மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் அணியில் என்னை போட்டியிட ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் ஹரிசிடம் கேட்டிருந்தார். இந்தக் கதையை கல்முனை ஹரிஸ் ஒரு பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக சொல்லியும் இருந்தார்.
சஜித் அணியில் ஹிஸ்புல்லாஹ் களமிறங்கி இருந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம். கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கூடக் கிடைத்திருக்கலாம். இதனைத் தெரிந்து வைத்திருக்கும் மு.கா.தலைவர் ஹக்கீம் திட்டமிட்டு வேலை பார்த்திருக்கின்றார் என்பது கிழக்கில் இருக்கும் சிறுகுழந்தைக்கும் நன்றாகத் தெரியும்.
ஹிஸ்புல்லாஹ் மீது நமக்குக் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. என்றாலும் ஹக்கீமுடன் ஒப்பு நோக்கின்ற போது மீன்பாடும் மண்ணுக்கு அவர் தேவை எதிர்பார்க்கப்படுகின்றது.