‘அப்பாவி மலையக மக்கள் தலையில்
மிளகாய் அரைக்கும் இராஜதந்திரம்’
நான் விரைவில் ஓய்வு பெறப்போகின்றேன் தனக்குப் பின்னர் கண்டி வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு ஐமச. மனோ தரப்பு வேட்பாளர் பாரத் அருள்சாமியைத் தலைவராக்கப் போகின்றேன் என்று மு.கா. தலைவர் ஹக்கீம் கண்டி அரசியல் மேடைகளில் குறிப்பாக மலையக வாக்காளர் மத்தியில் பேசி வருகின்றார்.
தனக்கு முஸ்லிம்கள் மத்தியில் சரிகின்ற வாக்கை சரி செய்ய இது ஹக்கீம் மேற்கொள்ளும் மற்றுமொரு கபட நாடகம்-இராஜதந்திரம்தான். அருள் சாமிக்குத்தான் முஸ்லிம் வாக்குகளை வாங்கித் தரப்போவதாகவும் இவர் வேறு கதை விடுகின்றார்.
சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. அப்படிச் சொல்லி இவர் மலையக மக்களை ஏமாற்றி அவர்கள் வாக்குகளைக் கொள்ளையடிக்க முயல்கின்றார். கண்டி முஸ்லிம்களுக்கு அருள்சாமி தலைமை என்பதற்கு அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் தான் ஹக்கீமுக்குத் தக்க பதில் கொடுக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஹக்கீம் எந்தளவுக்கு அச்சத்தில் இருக்கின்றார்
என்பது அவரது உளறல்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
ஒரு விடயத்தை பேசி விட்டு நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அதற்கு வேறு அர்த்தம் என்று பல்டியடிப்பதில் இந்த ஹக்கீம் விண்;ணன். எனவே நமது இந்தக் குறிப்புக்கும் அவர் புது விளக்கம் கொடுக்கக் கூடும். முஸ்லிம்கள் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் ஹக்கீம் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது ஆரோக்கியமாக இருக்கும்.