–நஜீப்–
நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் காலி எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி அனுர தரப்புக்கு பெரும் பின்னடைவு என்று சில அரசியல்வாதிகள் கணக்குச் சொல்லி வருகின்றனர்.
அதில் மூத்த அரசியல்வாதிகள் கூட இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. படிப்பறிவு இல்லாத குடிமகன் தனது கட்சி வெறியில் அப்படி கதைகளைச் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தமது தரப்புக்கு விழுந்த காயத்தினால் எழுப்பப்படும் ஓலமாகத்தான் நாம் இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
மொத்தமாக அங்கு இருக்கின்ற பதினேழு (17) வட்டாரங்களில் பதினைந்தை (15) அனுர தலைமையிலான அணி வெற்றி கொண்டிருக்கின்றது என்றால் அது ஒரு அசாதாரண வெற்றி என்றுதான் பார்க்க வேண்டும். இதனை வீதத்தில் சொல்வதாக இருந்தால் என்பத்தி எட்டு (88) சதவீதத்துக்கு மேற்பட்ட வெற்றி.
ஆனால் எதிரணி அரசியல்வாதிகள் சொல்கின்ற நயவஞ்சக் கணக்குக்கு ஆளும் தரப்பில் இருந்து இப்படியாக எவரும் தர்க்க ரீதியில் பதில் கொடுத்ததை நாம் இதுவரை காணவில்லை.