டக்லஸ்-சுமந்திரன் கனவில் இடி!

நஜீப்

நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல்

ஜனாதிபதி அனுரவுடன் யாருக்கும் போட்டோ எடுத்துக் கொள்ள முடியும். அவர் ஒரு பொது மனிதன். இப்போது அவர் என்பிபி.க்குச் சொந்தமான ஒருவர் அல்ல. அவர் தேசத்தின் சொத்து. எனவே அவரைச் சந்திக்க போகும் மனிதர்களுடன் போட்டா எடுத்துக் கொண்டதற்காக அவர்களுடன் நெருக்கமாகி விட்டார் என்பது அதன் அர்த்தமல்ல. இப்படித்தான் டக்லஸ்  சுமந்திரன் சிறீதரனுடனான சந்திப்புக்களும்.

நிச்சயமாக இவர்களுக்கு எமது அரசாங்கத்தில் ஒரு போதும் அமைச்சுக்கள் வழங்கப்பட மாட்டாது என்று நான் உறுதியாக இங்கு கூறி வைக்கின்றோன் என்று அடித்துக் கூறி இருக்கின்றார். ஜேவிபி-என்பிபி.யின் பிரதான தலைவர்களில் ஒருவரான சந்திரசேகரன்.

 யாழ்ப்பாணத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை உறுதி செய்திருந்தார். சில சமூக ஊடகங்களை வைத்து சிலர் தமக்கு அமைச்சுப் பதவிகள் என்று விட்ட கதைகள் இத்துடன் முடிவுக்கு வந்திருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம்.

Previous Story

பயங்கரவாதிகள் பாலியல் கொடுமை: சூடானில் 130 பெண்கள் தற்கொலை

Next Story

USA தேர்தல்: கமலா VS  டிரம்பின் அறியப்படாத பக்கங்கள்