–நஜீப்–
நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல்
அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நாட்டில் ஒரு சர்வ கட்சி அரசு அமைவது ஆரோக்கியமானது என்று பேசி இருப்பதுடன் நான் இப்படி பேசுவதால் ஆளும் தரப்புக்குப் போகப் போதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ஞாபகப்படுத்தினார்.
ஆனால் சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அனுர ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது இவர்கள் சமூகத்துக்குச் சொன்ன கதைகளை இன்னும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மனிதன் ஒரு கணிதப் பாடத்தை கற்றுக் கொடுக்கப் போய் முட்டி மோதினார்.
அவரது சகா காத்தனூர் கலாநிதி அனுர வென்றால் நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது சமூகத்துக்குப் பேராபத்து என்றார். இப்போது அவரும் நாங்கள் அனுரவுடன் கூடி வாழத் தாயாராகத்தான் இருக்கின்றோம் என்று பச்சை கொடி காட்டுவதுடன் அவரை புகழ்ந்து தள்ளியும் வருகின்றார்.
அனைத்துக் கட்சி அரசு சமைத்தால் தனக்கு ஒரு அமைச்சு சமையும் என்ற எதிர்பார்பு போலும்.! ஆனால் அந்தப் பருப்பு இங்கு வேகாது.அனுர ரணிலோ சஜித்தோ இல்லை.