–நஜீப்–
நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல்
எல்லோருக்கும் உபதேசம் பண்ணுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசியல் யாப்பு பற்றி ஹரிணிக்கு எதுவுமே தெரியாது. அவர் தன்னிடம் யாப்புப் பற்றி படிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார். பதினேழு முறை மக்களினால் நிராகரிக்கப்பட்ட இந்த மனிதன் தனக்கு பாடம் சொல்லித் தரப்போகின்றாராம்.?
யாப்புப் பற்றிய ரணிலுக்கு அறிவு இருந்தால் தேர்தல்களை சட்டவிரோதமாகத் தள்ளிப்போட்டு மூக்குடைபட்டிருப்பாரா என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி கேட்ட போது கூட்டத்தில் இருந்தவர்கள் கரகோசம் செய்தனர். மேலும் ரணிலிடம் நான் யாப்புப் படிக்க போனேன் என்று இங்கு சொன்னால் நீங்கள் எனக்குப் பைத்தியம் என்றுதான் நினைப்பீர்கள்.
யாப்பை தப்புத் தப்பாக மீறியமை தொடர்பாக ரணிலுக்கு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டி இருந்தார். மரம் கொத்திப் பறவை எல்லா மரங்களிலும் கொத்தி ஒரு சந்தர்ப்பத்தில் வாழை மரத்திய கொத்திய கதை போல தான் ரணில் பிரதமர் ஹரியிடம் மட்டி இருக்கின்றார்.
ரணிலின் பேச்சை நாட்டில் சிறுகுழந்தை கூட மதிப்பதில்லை. இது ரணிலுக்கு என்றுமே புரிவதில்லை.!