ஜனாதிபதி அனுரவுக்கு தமிழ்த் தேசியக் கட்சி பச்சைக் கொடி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அண்மைய  கூட்டங்களில், அரசாங்கம் வழங்கும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற கருத்து கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசாங்கத்தில் இணையக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.

மக்களின் தேவைகள்

எவ்வாறாயினும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையல்ல என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன், அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கினால் அதுபற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு | Tna Stand On Working With Anura Government

இந்தநிலையில், அமைச்சுப் பதவிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்த அவர், பயனுள்ள வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அநுர அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு | Tna Stand On Working With Anura Government

அதே நேரத்தில், மோசடி மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படமுடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Previous Story

சீனாவிடம் நெருங்கும் வங்கதேசம்! 

Next Story

வாழையில் கொத்திய ரணில்!