-நஜீப்-
(நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்)
இந்த முறை நடக்கின்ற பொதுத் தேர்தலில் எதிரணியினர் பேரணிகளையோ பாரிய அளவிலான கூட்டங்களையோ நமக்குக் கண்டு கொள்ள முடியவில்லை. அதே நேரம் அனுர தரப்பு என்பிபி.
தனது முதலாவது கூட்டத்தை கடந்த வாரம் தமது கட்சித் தலைவர் ரோஹண விஜேவீரவின் செந்த ஊரான தெற்கு தங்கல்லையில் துவங்கி இப்போது மாவட்ட மட்டத்தில் இது நடந்து வருகின்றது. என்னதான் தனக்கு வேலைப்பழு இருந்தாலும் ஜனாதிபதி அனுர அந்தக் கூட்டங்களுக்குப் போய் உரையாற்றி வருகின்றார்.
அதே நேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் பிரதான பேரணிகளைக் கைவிட்டு பொக்கட் மீட்டின்கள் என்ற அளவில் கீழே இறங்கி வந்து தனது கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன.
அதே நேரம் சிலிண்டர் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணிலைத் எந்தத் தேர்தல் மேடைகளிலும் கண்டு கொள்ள முடியாதிருகின்றது. இதிலிருந்து இவர்களது தேர்தல் முடிவுகள் என்ன என்பதை மக்களும் முன்கூட்டியே கண்டு கொள்வார்கள். மொட்டுக்கள் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.