தலைவரும் பிள்ளைகளும் கதை இது!

-நஜீப்-

(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)

கண்டியில் தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு என்றும் இல்லாத அளவில் அங்கு நெருக்கடி. அவர் மீது மக்கள் கடும் அதிர்ப்தியில். அவர் கட்சியின் இருந்த மக்கள் பிரதிநிகள் பலர் ஆதரவாலர்கள் சகிதம் அவரை விட்டு விலகி  ஜனாதிபதி அனுர தரப்புடன் இணைந்து வருகின்றார்கள்.

இதில் தலைவருடன் பல தசப்தகள் ஒன்றாக இருந்தவர்களும் இருக்கின்றார்கள். ஏமாற்றப்பட்ட ஒருவர் நாங்கள் பல தசாப்தங்களாக உங்களுடன் அரசியல் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் நேற்று வந்தவர்களுக்கு நீங்கள் சலுகைகளையும் வசதிகளையும் செய்து வருகின்றீர்கள்.

ஆனால் நமக்கு….? என்று தலைவரிடத்தில் முகத்திற்கே கேட்க, நீங்கள் எனது வீட்டுப் பிள்ளைகள். பக்கத்து வீட்டுப்பிள்ளையை கடைக்கு அனுப்பினால் ஏதாவது கையில் பொத்த வேண்டும். சொந்தப் பிள்ளைகளுக்கு அப்படி எல்லாம் செய்யத் தேவை இல்லை. இது தலைவர் அதிரடிப் பதில்.

தலைவருக்காக காலம் பூரவும் மாடாய் உழைக்கும் ஏமாளிகள் இந்தக் கதையை ஒரு முறை யோசிக்க வேண்டும். பணம் என்றால் பிணமும் வாய்திறப்பதால் அவருக்கு தேர்தலில் வாய்ப்பு இருக்கலாம்.!

Previous Story

இளசுகள் ஜனாதிபதி பக்கமாம்!

Next Story

ஜம்மியத்துல் உலமா சபை விலை போய் விட்டதா?