கண்டியில் NPP காக களம் இறங்கும் சிவில் அமைப்பு!

-யூசுப் என் யூனுஸ்-
அம்பாறை (திகாமடுல்ல) கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையையும் வாக்காளர்களையும் கொண்ட செல்வாக்கான மாவட்டம் கண்டி.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய மாவட்டங்களைப் போலவே கண்டிய முஸ்லிம்களும் ஜனாதிபதி அனுரவின் வெற்றிக்கு தமது பங்களிப்பை வழங்கி இருப்பது தெளிவாகின்றது.
அந்த வகையில் ஜனாதிபதி அனுர குமாரவின் தலைமையில் ஒரு பலமான நாடாளுமன்றம் அமைந்தால் மட்டுமே மக்கள் நலனுக்கான ஒரு ஆட்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமாக இருக்கும்.
எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி சகோ. அனுர தலைமையிலான என்பிபி அணிக்கு மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஒரு ஆட்சி அமையப் பெற வேண்டி இருக்கின்றது.
இந்த நோக்கங்களுக்காக கண்டியில் களத்தில் இறங்க மிகப் பலமானதொரு முஸ்லிம் சிவில் அமைப்பு தயாராகின்றது.

நோக்கமும் இலக்கும்

தூய்மையான மக்கள் ஆட்சிக்கு துணை நிற்பதும் அதற்குத் தேவையான நாடாளுமன்றப் பலத்தை பெற்றுக் கொடுப்பதும்.

இப்படி ஒரு அமைப்பு ஏன் அவசியம்

1.இன ஐக்கியம்
இந்த நாட்டில் அனைத்து இனங்களும் ஐக்கியமாக வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அவசியம். அதனை உருவாக்க NPP பாடுபடுகின்றது. அதற்கு நமது ஒத்துழைப்பை வழங்குவது.
2.தூய்மையான ஆட்சி
நீதியும் நேர்மையுமான ஆட்சி ஒன்றை உருவாக்க NPP உத்தரவாதம் கொடுத்திருக்கின்றது. அதனால் அவர்களுக்கு நாமும் துணைபுரிய வேண்டி இருக்கின்றது.
3.பல்லினங்களுக்கான கௌரவம்
இந்த நாட்டில் வாழ்கின்ற பல்லினங்களும் தத்தமது தனித்துவங்கள் கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் சுதந்திரமாகவும் அச்சமின்றி கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான உறுதி பூண்டிருக்கும் தேசிய மக்கள் சக்திக்கு நமது ஒருமைப்பாட்டையும் மரியாதையும் தெரிவிப்பது.
4.சமூகப் பங்களிப்பு
இப்படியான ஆரோக்கியமான திட்டங்களை முன்னெடுக்க முனைகின்ற அரசுக்கு இடையூரின்றி தமது திட்டங்களை அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் அவசியம். அதனை அடைவதற்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை முடியுமான மட்டும் பெற்றுக் கொடுப்பது நம் அனைவரினதும் கடமை.
5.சமூக மற்றும் சமயக் கடமை
இஸ்லாத்தின் பார்வையில் நாட்டில் தூய்மையான அரசியலையும் ஆட்சியையும் முன்னெடுக்கின்ற ஒரு அரசியல் இயக்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது முஸ்லிம்களாகிய எமது தார்மீக மற்றும் சமூக சமயக் கடமையும் கூட.
மேலும் இந்த அமைப்பில் இணைந்து செயலாற்ற விரும்புகின்றவர்களுக்கான பகிரங்க அழைப்பு இது. இந்த அமைப்பின் அங்குரார்ப்பனக் கூட்டம்

தேசிய மக்கள் சக்தி NPP

கண்டி மாவட்ட பிரதான செயலகத்தில்
பழைய பேராதனை வீதி
(
ஹீரஸ்ஸகல றோட் சந்தி அருகில்)
கண்டி என்ற முகவரியில்

2024

October 20 icon PNG and SVG Vector Free Download

(ஞாயிற்றுக் கிழமை)
மு..10 மணிக்கு நடைபெறும்.
இதில் பங்கு கொண்டு இதயசுத்தியுடன் பணியாற்ற விரும்புகின்ற சகோதர சகோதரிகள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.-மிக்க நன்றி
0766658579
0776046367
0750297265
0775949377
0723711216
ரிசான் மொஹம்மட் 
(அமைப்பாளர்)
Previous Story

உதைப்பந்தாட்டம்: உச்சம் தொட்ட கலகெதர ஜப்பார்.

Next Story

டக்ளஸின் இணைப்புக்கு அரச விடுதி: அம்பலம்