பொதுத் தேர்தல் நகைச்சுவைகள்!

-நஜீப்-

(நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்)

வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நடந்த செய்திகள் நகைச்சுவைகள் என நிறையவே இருந்தாலும் அதில் சிலவற்றை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதில் முதலாவது விமல் வீரவன்ச எடுத்திருக்கும் தீர்மானம்.

இந்தத் தேர்தலில் நமது கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டியிடாது. நாம் ஏற்கெனவே இருந்த கட்சியின் ஒருவர் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார். அவருக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரத்தை நாம் மதிக்கின்றோம்.

அவருக்கு எதிராக நிறையவே விசமிகள் செயல்பாடுகளும் இருக்கின்றன. அதனால் அவரை நாம் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது என்பது விமல் விடும் கதை. அடுத்தவர் வாசு.

தமது அணி தனித்து வேட்பாளர்களை இறக்கினாலும் நாங்கள் என்பிபி.க்கு ஆதரவாகத்தான் தேர்தலுக்கு வருகின்றோம்.

இது வாசு தரும் விளக்கம். என்பிபி.யில் வேட்பு மனு எதிர்பார்த்து ஏமாந்த ரஞச்சன் தனியாகவும். நடிகர் கமல் அத்தராரச்சி வீஜேவீர மகன் உவிந்து கட்சியில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

மைத்திரியும் மகனும் திலித் அணிக்குத் தாவல்.இது ஒரு உதவிக்குக் கைமாறு என்றும் கதை. எப்படி இருக்கின்றன இந்த நியாயங்கள்!

 

 

Previous Story

நயவஞ்சக அரசியலுக்கு வரும் ஆப்பு!

Next Story

டாக்டர் சாபியா...! நடுக்கம்