விமான சேவைகள் முற்றிலும் ரத்து

Latest Tamil News
இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் ஈரான், லெபனான் நாடுகள் இன்று (அக்.,07) இரவு விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து, இன்றுடன் ஓரு ஆண்டாகிறது.

ஆனால் தற்போது வரை அங்கு பதற்றம் தணிந்தபாடில்லை. இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க

 காசா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்… தீவிரம்!  சரமாரி குண்டு வீச்சில் 26 பேர் பலி

 காசா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்... தீவிரம்!  சரமாரி குண்டு வீச்சில் 26 பேர் பலி
சமீபத்தில் அந்த அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. அந்த அமைப்பின் தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில், 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது. இப்படி பல முனையிலும் தாக்குதல்களை சந்தித்து வரும் இஸ்ரேல், முழு வீட்டில் பதில் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

இதையும் பாருங்க

இஸ்ரேலுக்கு பைடன் அட்வைஸ் விமான சேவை ரத்து இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அபாயம் இருப்பதால், இன்று இரவு (அக்.,07) அனைத்து விமான சேவைகளையும் ஈரான் ரத்து செய்து உள்ளது. ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட்டில் இருந்து செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

Previous Story

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

Next Story

ஹிஸ்புல்லா தான் டார்கெட்..