டொலரின் வீழ்ச்சி: பொருட்களின் விலைகள் 

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவினால் இந்த மாற்றம் ஏற்படும் எனவும், அத்தகைய விலை நிவாரணம் கிடைக்க கணிசமான காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ரூபாயின் பெறுமதி வலுவடையும் போது இறக்குமதி பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பது கட்டாயமாகும். எனினும் அதனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.

பொருட்களின் விலை

அது காலத்துடன் முறையாக இடம்பெற வேண்டும். பொருட்கள் ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்துவதற்கு ஒரு காலப்பகுதி எடுத்துக் கொள்ளும்.

இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் சுமையை மக்கள் மீது வர்த்தகர்கள் திணிக்கும் போதிலும் அதன் பெறுதி வலுவடையும் போது நன்மையை மக்களுக்கு வழங்கும் ஒரு நடைமுறையை காணமுடிவதில்லை.

பூகோள நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

Previous Story

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

Next Story

வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம்