-நஜீப்-
ஜனாதிபதித் தேர்தலில் நமது வரலாற்றில் என்றுமில்லாது அளவில் இந்த முறை சமூக ஊடகங்கள் தாக்கங்களைச் செலுத்தி இருக்கின்றன. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பிலும் அவை தாக்கங்களை செலுத்தி இருக்கின்றது.
மக்களைத் தெளிவுபடுத்துவதிலும் சமூக ஊடகங்கள் நல்ல பங்களிப்புக்களைச் செய்திருப்பதுடன் சில சமூக ஊடகங்கள் பொருளாதார நலன்களுக்காக மக்களைப் பிழையாக வழி நடாத்திய சந்தர்ப்பங்களும் இந்தத் தேர்தலில் நிறையவே நடந்திருக்கின்றன.
எனவே பொதுமக்களை ஏமாற்றி பிழையான வழிகளில் இட்டுச் சென்றவர்கள் இனம் கணப்பட வேண்டும். தொடர்ச்சியாக நாட்டில் தேர்தல்கள் வர இருப்பதால் இந்த ஆலோசனை.
நமது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் 19ம் திகதி காலை ஊடகங்களிடம் பேசும் போது ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தலில் இருபத்தி இரண்டு (22) மாவட்டங்களிலும் முன்னணயில் இருப்பதாகச் சொன்னார்.
இப்போது என்ன நடந்திருக்கின்றது.? இது பற்றிக் கேட்டால் தோற்றுப் போவோம் என்று சொல்லி வாக்குக் கேட்க முடியுமா என்று அவர் எம்மைத் திருப்பிக் கேட்டாலும் கேட்பார்.
நன்றி: 22.09.2024 தினக்குரல் ஞாயிறு வாரஇதழ்