ஜனாதிபதித் தேர்தல் 2024 வெற்றி வாய்ப்பு

இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற எல்லோரும் தமக்குத்தான் வெற்றி என்பார்கள். அது அவர்களது உரிமை. ஆனாலும் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் வெற்றியைக் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் நாம் சில தகவல்களைச் சொல்கின்றோம். இதன் உண்மைத் தன்மையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Anura Kumara Dissanayake | අද (24) පෙරවරුවේ පැවති රත්නපුර දිස්ත්‍රික් ව්‍යාපාරික හමුවට සහභාගි වීමි. "පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්" උදාකරන, නව පුනරුද මඟට ...

பெரும்பாலான சிங்கள மக்கள் அனுரவை ஆதரிக்கின்றார்கள். இது 45-60 சதவீதம் வரை. வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பலானவர்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அரியநேந்திரனுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அதுவும் ஏறக்குறைய மேற்சொன்ன 45-60 சதவீதம் வரை செல்லலாம்.

முஸ்லிம் மக்களில் பெரும்பாலனவர்கள் 40-50 சதவீதம் சஜித்துக்கு. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் 30-35 சதவீதமான முஸ்லிம் வாக்குகள் அனுரவுக்குப் போகலாம். இது 1994ல் சந்திரிக்காவுக்கு இருந்த ஆதரவு போல ஒரு நிலை. முஸ்லிம் மக்களில் ரணிலுக்கும் 15-20 சதவீதமானவர்கள். (முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது முஸ்லிம் சமூகம் மிகுந்த வெறுப்பில் இருப்பதால் இந்த நிலை.) 

மலையக மக்களில் 40-50 சதவீதத்தினர் சஜித்துக்கும் 30-40 சதவீதமானவர்கள் ரணிலுக்கும் 15-20 சதவீதமானவர்கள் அனுராவுக்கும் வாக்களிக்கலாம். திகாம்பரம், மனோ, ராதா சஜித்துடனும் ஜீவன், செந்தில், சுரேஸ், குமார் என்போர் ரணிலுடனும் இருப்பதால் இந்த நிலை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் ஐதேக.வுக்கு என்று இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. இதனால் ரணில் மற்றும் சஜித்தின் வெற்றி வாய்ப்புக்கு இது பெரும் ஆப்பாக இருக்கின்றது. குறிப்பாக தட்டிப் பறித்து விட்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

Presidential election this year: Different strategies by various alliances | Print Edition - The Sunday Times, Sri Lanka

2024 ஜனாதிபதித் தேர்தலில்
மொத்த வாக்குகள் 17140354.

தேர்தலில் 80 சதவீத வாக்களிப்பு என்று எடுத்துக் கொண்டால்

மொத்த செல்லுபடியான வாக்குகள் 13712283.

சிங்கள வாக்களர்    09872843
இல.தமிழர்                 01645473.
முஸ்லிம்கள்            01371228.
இந்.தமிழர்                  00822736.

இதன் படி நாம் மேற்சொன்ன வகையில் வாக்குகள் பிரியும் போது இந்த தேர்தலில் அனுர குமரவுக்கு மிகச் சுலபமான வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. இதனை விகிதாசாரத்தில் பார்த்தால்

அனுர      45    %    6170557
சஜித்         32    %   4387930
ரணில்     11     %    1508351
நாமல்      07   %    0959859
அரிய.      02+ %    0274245
ஏனைய  03   %     0411368

கடைசியாக 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இதே கூட்டணி வைத்திருந்த சஜித் பெற்ற மொத்த வாக்குகள் 2771984. ஆனால் கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் 5564239 வாக்குகள் பெற்றதால் அவர்கள் தரப்பு  நம்பிக்கையில் இருக்கின்றது.

ஆனால் சிங்களவர் இலங்கைத் தமிழர் முஸ்லிம்கள் இந்தியத் தமிழர்கள் உணர்வுகள் இப்போது சஜித் அந்த இலக்குக்குச் செல்ல இடமளிக்காது என்பது எமது வாதம்.

கடந்த தேர்தலில் அனுர தரப்பு 445958 வாக்குகளைப் பெற்றிருந்தாலும் தேர்தல் களமும் மக்களின் உணர்வுகளும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்தத் தேர்தலில் அனுர வெற்றி வாய்ப்பு மேற்சென்ன நிலையில் இருக்கின்றது.

சிங்கள மக்கள அவருக்கு வழங்குகின்ற வாக்கு வீதம் 53 என்ற எண்ணிக்கைளை உறுதி செய்யுமாக இருந்தால் அனுர எழுபது இலட்சம் (70) வாக்குகள் வரை செல்ல முடியும்.

-நஜீப் பின் கபூர்
தினக்குரல் அரசியல் ஆய்வாளர்
(ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் கொம். மற்றும்
கார்டியன் நியூஸ் செய்தித்தாள் என்பவற்றின்
பிரதம ஆசிரியரும்.)
Previous Story

அகுரண  PMJD ஒரு தரப்பினர் NPP க்கு ஆதரவு

Next Story

நாளையும் மறுதினமும் என்பிபி எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்!