மிஸ் சுவிட்சர்லாந்து அழகியை துண்டு துண்டாக வெட்டி.. மிக்ஸியில் போட்டு அரைத்த “சைக்கோ” கணவன்!

பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதியான நாடுகள் என்பார்கள். அங்குக் கொடூர குற்றங்கள் பெரிதாக நடக்காது. அப்படிப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. கணவரே தனது மனைவியை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் எப்போதும் அமைதியான வாழ்க்கைக்குப் பெயர் போனவை. ஆனால், அங்கும் கூட சில சமயங்களில் மிக மோசமான குற்றங்கள் நடக்கிறது. அப்படியொரு கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. ஒட்டுமொத்த சுவிட்சர்லாந்து நாட்டையும் வெல வெலத்து போகச் செய்த ஒரு பகீர் குற்றம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

Kristina Joksimovic: Miss Switzerland finalist 'strangled, dismembered and pureed in blender by husband' | The Independent

இறுதி போட்டியாளர்: மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவர் அழகி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். இவரைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய அவரது கணவர் தாமஸ், உடல் பாகங்களை எல்லாம் கெமிக்கல் மூலம் கரைத்துள்ளார்.

38 வயதான முன்னாள் மாடல் கிறிஸ்டினாவின் உடலின் சில பாகங்கள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பாசலுக்கு தென்மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது 41 வயது கணவர் தாமஸ் கைது செய்யப்பட்டார்.  தனது மனைவியைக் கொலை செய்ததை தாமஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

குற்றப்பத்திரிகையில் பகீர் பகீர் தகவல்: இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தன்னை விடுவிக்க வேண்டும் என்று தாமஸ் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், இவ்வளவு கொடூரமாகத் தனது மனைவியைக் கொலை செய்த இந்த கொடூரனை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. நீதிமன்ற ஆவணங்களில் அவர் தனது மனைவியை எப்படிக் கொன்றார் என்ற ஷாக் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Miss Switzerland finalist and her husband had 'the perfect family' with their two daughters before 'he killed her and turned her into puree with a blender', friends say | Daily Mail Online

கிறிஸ்டினாவை தாமஸ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தாமஸ் தனது வாக்குமூலத்தில் இதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு லான்டரி அறைக்கு (துணி துவைக்கும் மெஷின்கள் இருக்கும் ரூம்) மனைவியின் உடலை இழுத்துச் சென்றுள்ளான் தாமஸ். அங்கு ஜிக்சா, கத்தி மற்றும் தோட்டத்தில் செடிகளை கட் செய்ய உதவும் கத்திகளைப் பயன்படுத்தி மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளான்.

மிக்ஸி: கிறிஸ்டினா உடலின் சில பாகங்களை மிக்ஸியில் போட்டும் தாமஸ் அரைத்துள்ளான். மேலும், சில பாகங்களை கெமிக்கல் போட்டும் கரைத்துள்ளான். இந்த கொடூரம் எல்லாம் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் தற்காப்புக்காகவே தனது மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாக தாமஸ் கூறுகிறார். மனைவி கிறிஸ்டினா தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும் இதன் காரணமாகவே கொலை செய்ய நேர்ந்ததாகவும் கூறியுள்ளான். கொலை செய்த பிறகு போலீசாரிடம் மாட்டிவிடுவோம் என்ற பீதியில் உடலைத் தண்டாக்கத் தொடங்கியதாக பகீர் வாக்குமூலத்தை கிறிஸ்டினா அளித்துள்ளார்.

Miss Switzerland finalist and her husband had 'the perfect family' with  their two daughters before 'he killed her and turned her into puree with a  blender', friends say | Daily Mail Online

சைக்கோ கணவர்: இருப்பினும், மருத்துவ முடிவுகள் தாமஸின் இந்த கருத்துக்கு நேர் மாறாக உள்ளது. தாமஸ் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லும் மருத்துவர்கள், கொடூரமான குற்றங்களைச் செய்யும் சாடிஸ்ட் மனநிலை தாமஸுக்கு அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கொடூர குற்றம் செய்யும் மனநிலை, பரிதாபப்படும் குணம் இல்லாதது ஆகியவையும் அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கொலைக்கு முன்பும் கூட தாமஸ் முன்பே ஒரு முறை தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றுள்ளான் என்பதும் விசாரணையில் தெரிந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், தாமஸுக்கு அதிகபட்ச தண்டனை தரப்படும் என்றே தெரிகிறது

Previous Story

அமெரிக்க தேர்தலில் முந்துவது யார்? 

Next Story

அடி கொஞ்சம் பலமா பட்டுடுச்சு; இன்னொரு விவாதம் தேவையில்லை; ஓட்டம் பிடித்தார் டிரம்ப்