ஜனாதிபதி: கருத்துக் கணிப்பில் ரணிலுக்கு சாதக நிலை…?

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோரிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்ஸ்டியுட் ஒஃப் ஹெல்த் பொலிசி ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலமே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

புள்ளி விபரம்

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான சாதகமான நிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதிக்கான கருத்துக்கணிப்பில் இருவருக்கு சாதக நிலை | Election Winner Evaluation 2024 Ihp

அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

மேலும், , சஜித் பிரேமதாசவிற்கான (Sajith Premadasa) சாதக நிலையில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

அதேவேளை, குறித்த ஆய்வு நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருப்பதனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கான ஆதரவு வீதத்தினையும் இதனுடன் இணைத்துள்ளது.

Previous Story

இஸ்ரேல்:நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம்

Next Story

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கு சிறீதரன் எம்.பி. கடும் எதிர்ப்பு