அதிரடி மாற்றத்திற்கு ரெடியாகும் வங்கதேசம்!”16 பேர் கொண்ட டீம்.

 ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணல

Bangladesh | Today's latest from Al Jazeera

வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியை மாணவர் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், வங்கதேசம் அடுத்த மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது.

முகமது யூனஸ்: நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்றார். 84 வயதான அவர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பதவியேற்றார். இது அந்நாட்டில் கிட்டதட்ட பிரதமருக்கு இணையான பதவி என்று சொல்லப்படுகிறது.

நேற்று மாலை அவர் டாக்காவில் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 16 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை. மாறாக ஆலோசகர்களாகப் பதவியேற்றார். இந்த இடைக்கால அரசில் இருப்போரில் ஒரே ஒருவர் மட்டுமே ராணுவ பின்புலம் கொண்டவராக இருக்கிறார்.

மற்றவர்கள் சாதாரண நபர்களாகவே உள்ளனர். மொத்தம் 16 பேர்: இப்போது அமைந்துள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசகர்கள் குழு இடம்பெற்றுள்ளது. வரலாறு காணாத நெருக்கடியில் வங்கதேசம் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டை இந்த குழு வழிநடத்த உள்ளது.

மேலும், தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கைமாறுவதையும் இவர்கள் உறுதி செய்வார்கள். மாற்றுவதற்கான தேர்தலை மேற்பார்வையிடும்.

இந்த வழிகாட்டுதல் குழுவில் பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) எம்.சகாவத் ஹொசைன், பெண்கள் உரிமை ஆர்வலர் ஃபரிதா அக்தர், வலதுசாரிக் கட்சியின் ஹெஃபாசாத்-இ-இஸ்லாமின் துணைத் தலைவர் ஏ.எஃப்.எம். காலித் ஹொசைன், கிராமின் டெலிகாம் அறங்காவலர் நூர்ஜஹான் பேகம், சுதந்திரப் போராட்ட வீரர் ஷர்மீன் முர்ஷித், சிட்டகாங் ஹில் டிரக்ட் சாப்டாக் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பேராசிரியர் பிதான் ரஞ்சன் ராய் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் தௌஹித் ஹொசைன் ஆகியோர் உள்ளனர்.

மேலும், எம்டி நஸ்ருல் இஸ்லாம், அடிலுர் ரஹ்மான் கான், ஏஎஃப் ஹசன் அரிஃப், சையதா ரிஸ்வானா ஹசன், சுப்ரதீப் சக்மா மற்றும் ஃபரூக்-இ-ஆசம் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய மாணவர் குழுவில் இருந்து நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகிய இரண்டு மாணவர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஷேக் ஹசீனாவை அலறவிட்ட 2 மாணவர்கள்..

15 ஆண்டு சாம்ராஜ்யம் 5 நாளில் சரிந்தது எப்படி? உடனடி நடவடிக்கை: வங்கதேசத்தில் பல வாரங்களாக வன்முறை மற்றும் மோதல்கள் நடந்து வருகிறது. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அவை ஓரளவுக்குக் குறைந்துள்ளன.

இருப்பினும், சில இடங்களில் வன்முறை தொடர்ந்து வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கிடையே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு நொடியும் வேஸ்ட் செய்யாமல் வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

சரிந்த சாம்ராஜ்யம்:

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்தே மாணவர் போராட்டம் முதலில் ஆரம்பித்தது. அங்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதில் இதுவரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Previous Story

தமிழ் பொது வேட்பாளர்:சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல்

Next Story

அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம்