தமிழ் பொது வேட்பாளர்:சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல்

தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பொது வேட்பாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாக போட்டியிட முடியும். அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார்.

கட்சியின் முடிவு

தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களை பரிசீலித்தே, பா.அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல் | Suresh Premachandran On Tamil Candidate

இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல் | Suresh Premachandran On Tamil Candidate

நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும். இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்” என கூறியுள்ளார்.

Previous Story

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து - பதவிகள் நீக்கம்

Next Story

அதிரடி மாற்றத்திற்கு ரெடியாகும் வங்கதேசம்!"16 பேர் கொண்ட டீம்.