பாகிஸ்தான் நதீம்: ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்று சாதனை!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Arshad Nadeem Creates History, Becomes 1st Pakistani To Win Gold Medal In  Olympics - News18

நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.

நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.

கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து, ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

நீரஜ் சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

நதீம் தங்கப்பதக்கம் பற்றி நீரஜ் கூறியது என்ன?

வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, நாட்டிற்காக எப்போதெல்லாம் பதக்கம் வெல்கிறோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வோம் என கூறினார்.

”நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால், இது அர்ஷத் நதீமின் நாள்” எனவும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார்.

”இன்று போட்டி நன்றாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு தடகள வீரர்களுக்கும் அவர்களுக்கான நாள் இருக்கும். இன்று அர்ஷத் நதீமின் நாள். எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும்.

நமது தேசிய கீதம் ஒன்று ஒலிபரப்பப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் வேறு எங்காவது ஒலிபரப்பப்படும்” என ஏஎன்ஐ செய்தி முகமையிடம் நீரஜ் சோப்ரா கூறினார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார்

நதீமும் என் மகனே – நீரஜ் சோப்ராவின் தாய் பெருமிதம்

நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

“வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தங்கப் பதக்கம் வென்றவரும் (அர்ஷத் நதீம்) என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மட்டுமின்றி அவரின் தாத்தா தர்ம் சிங் சோப்ரா, அப்பா சதீஸ்குமார் ஆகியோரும் நீரஜ் சோப்ராவின் வெள்ளிப் பதக்க வெற்றியை அவர்களின் கிராமத்தில் கொண்டாடி வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா

வரலாறு படைத்த அர்ஷத் நதீம்

நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் சரியாக வீசவில்லை. பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார்.

இரண்டாவது சுற்றில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதுநாள் வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இது வரலாற்று சாதனையாகும்.

அவர் தங்கம் வென்றதன் மூலம் பாகிஸ்தானின் 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் தங்கக் கனவு நிறைவேறியுள்ளது.

இரண்டாவது முயற்சியில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தொலைவு 89.45 மீட்டர். அவரது நெருங்கிய போட்டியாளரான பீட்டர்ஸின் தொலைவு 88.54 மீட்டர்.

ஜெர்மனியின் வெபரிடம் இருந்து அவருக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெபர் 87.40 மீ., புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார், இது போட்டியின் இரண்டாவது அதிகபட்ச தொலைவாகும்.

26 வயதான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 89.34 மீட்டர் தூரம் எறிந்து தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை உயர்த்தினார்.

சோப்ராவின் கிராமத்தில் ஒரு பெரிய திரை அமைக்கப்பட்டது, அதில் அனைவரும் நிகழ்வைப் பார்த்து வெற்றிகரமான தருணத்திற்காக காத்திருந்தனர்.

நீரஜ் நதீம்

கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்

84 மீட்டர் தூரத்தை அடையும் பட்சத்தில் நேரடியாக போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற விதியின் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த சுற்றில் அவர் 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

                                        வாழ்த்துகள் தெரிவித்த மோதி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நீரஜ் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை படைத்தவர்.

மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தைப் பெற்று வெற்றியுடன் வீடு திரும்புவதால் இந்தியா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கி நமது தேசத்தை பெருமைப்படுத்துவார்,” என்று குறிப்பிட்டார்.

நீரஜ் சோப்ராவின் தங்கக் கனவு

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறையும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர் களம் இறங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58மீ தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை உறுதி செய்தார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் பெற்றது அதுவே முதல்முறை.

அந்த போட்டியில் ஜேக்கப் வாத்லேஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். விதேஸ்லாவ் வெசெலி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.

துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்திராவை தொடர்ந்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 120 ஆண்டு கால வரலாற்றில், ட்ராக்-அண்ட்-ஃபீல்ட் (track-and-field) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்தார் நீரஜ் சோப்ரா.

இளம் வயதிலிருந்தே பயிற்சி பெறும் நீரஜ்

நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா.

உடல் எடை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த விளையாட்டை தேர்வு செய்தார் அவர் என்று ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக பானிபட்டில் உள்ளா சிவாஜி மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியை பார்த்து உத்வேகம் அடைந்தார் அவர்.

இந்திய ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர் சவுத்ரி, நீரஜிடம் இருந்த திறமையை பார்த்து வியந்து போனார்.

பிறகு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளையும் வழி காட்டுதல்களையும் வழங்கினார் ஜெய்வீர் சவுத்ரி.

நீரஜ் சோப்ரா

13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ராவின் நீளும் பதக்கப் பட்டியல்

அதன் பின்னர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற துவங்கினார் நீரஜ்.

2016ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதினருக்கான ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார் நீரஜ். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார். பிறகு 2018ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும், 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த அவர், 2022ம் ஆண்டு ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

2023ம் ஆண்டு புதாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஹாங்க்ஜூவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கம் வென்றார்.

நீரஜ் சோப்ரா

பாகிஸ்தான் வீரர் நீரஜ் பற்றி கூறுவது என்ன?

நீரஜ் மற்றும் அர்ஷத் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 9-0 என்ற கணக்கில் மலைக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்திருந்தார் நீரஜ். முதல் முறையாக நீரஜுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 2016-ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. தெற்காசிய போட்டிகளில் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் நீரஜ் முதல் இடம் பிடித்தார். அர்ஷத் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கூட, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு ஆன நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் அர்ஷத்.

“தெற்காசியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் இரண்டு வீரர்கள் நானும், நீரஜும் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறிய அர்ஷத், நாங்கள் தத்தம் நாடுகளுக்காக உலக அரங்கில் போட்டியிட்டு, நாட்டுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நீரஜ் சோப்ராவுடன் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் கூறிய அர்ஷத், “ஒவ்வொரு தடகள வீரரும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். நான் நீரஜுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் எங்களின் நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்போம்,” என்று கூறினார்.

Previous Story

நபி வழித் திருமணம்!

Next Story

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து - பதவிகள் நீக்கம்