ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் 


Latest Tamil News

இஸ்ரேலின் காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் நிர்வகித்து வருகிறது.

Shadowy Hamas leader in Gaza is at top of Israel's hit list after last month's deadly attack | AP News

கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும், பாலஸ்தீனத்தின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Hamas names architect of Oct. 7 attack as new leader

தற்போது ஹமாஸ் அமைப்புக்கு தலைமை யார் என அறிவிக்கப்படாத நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பின் புதியதலைவராக யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டார். தற்போது இஸ்மாயில் ஹானியாவிற்கு பதிலாக புதிய தலைவராக இருப்பார் என கூறப்படுகிறது.

Previous Story

யார்  இந்த யூனுஸ்!

Next Story

இறைவன் ராஜபக்ஸாக்களை வேகமாகத் தண்டிக்கின்றான்!