உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்..ஸ்ரீ லங்கா 149 இடம்

 சிங்கப்பூர் முதலிடம் – இந்தியாவுக்கு 82

சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட். சரி, அப்படி சொல்வது யார்? ஹென்லெ பாஸ்போர்ட் இண்டெக்ஸின் ( Henley Passport Index) சமீபத்திய தரவுகள் தான் அவ்வாறு சொல்கின்றன.

விமானத் துறையில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து, விசா இல்லாமல் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்பதை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 195 நாடுகளின் எல்லைகளை உங்களால் கடக்க முடியும். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ், அதற்கு அடுத்த இடங்களில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.

2018க்கு பின் முதன்முறையாக ஜப்பான் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கவில்லை.

Henley Passport Index 2024 Rankings ...

இந்த பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது. ஸ்ரீ லங்கா 149 இடம். இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்திருப்பது ஆப்கானிஸ்தான். அந்நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.

வலிமையான பாஸ்போர்ட் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வணிக பயணத்தை எளிதாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என இந்த ஆய்வை நடத்தியவர்கள் சொல்கிறார்கள்.

எனவே, இது வெறும் விடுமுறை கொண்டாட்டம் தொடர்பானது மட்டும் இல்லை.

Previous Story

ஹமாஸ் தலைவரை கொன்றது  மொசாட் உளவாளிகள்? 

Next Story

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் ஜமா திரைப்படம்!