சஜித் -ஹக்கீம் இரகசிய உடன்படிக்கை முடிந்தது

சில தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு ஹக்கீமையும் ரிசாடையும் சஜித் அழைத்திருந்தார். ரிசாட் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் பார்ப்போம் என்று அதனை தட்டிக் களித்துவிட்டார்.

ஆனால் மு.கா. தலைவர் ஹக்கீம் ஓடிப்போய் அந்த உடன்படிக்கையில் சஜித்துடன் இரகசியமாக கையெழுத்துப் போட்டுவிட்டார். இதனை எந்த ஊடகங்களும் காட்சிப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு இணங்க கெமராக்காரர்களுக்கு அதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசசார்பு ஊடகமொன்றில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றார் முன்னாள் ஆளுநரும் நுவாக் கட்சியின் தலைவருமான அசாட் சாலி. அத்துடன் மு.கா.வில் இருக்கின்ற பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன்தான் இருக்கின்றார்கள். ஒருவர் மட்டும்தான் ஹக்கீமுடன் என்றும் சாலி கூறுகின்றார்.

சமூகத்தின் பேரில் கட்சி நடாத்துகின்றவர்கள். உடன்படிக்கையில் உள்ள விடயங்களை பகிரங்கமாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். குறைந்தது தான் சார்ந்த கட்சிக்காவது சொல்ல வேண்டும்.

நன்றி கார்டியன் நியூஸ் 31.07.2024

 

Previous Story

இஸ்ரேல் vs இரான்:  மிகப்பெரிய போர்?

Next Story

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் , லொக்கு பட்டி கைது