கடும் எதிர்ப்புகளும் எதிர்பார்ப்பும்!

நஜீப் பின் கபூர்

Choose democracy over dictatorship- EC Chairman Mahinda Deshapriya | Sunday Observer

முட்டியை தகர்த்து தூள் பண்ணிப் போடுங்கள்-தேசப்பிரிய!

காசு வீசினால் பெரும்பான்மைக்கு வாய்ப்பும் இருக்கின்றது!

இந்த வாரம் நாட்டில் இரண்டு தலைப்புக்கள் மீது பெரும் ஆர்வம் மக்களிடத்தில் காணப்படுகின்றது. ஒன்று ஐக்கிய தேசியக் கட்சித் செயலாளர் ரங்கே பண்டார மூட்டி விட்ட தேர்தலுக்கு ஆப்படிக்கின்ற தீ . அதற்கு கடும் எதிர்ப்பு நாடுபூராவிலும் நிலவி வருகின்றது. அடுத்தது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படுகின்ற அணுர-சஜித் நேரடித் தொலைக் காட்சி (06.06.2024) விவாதம். இந்த இரு தலைப்புகள் பற்றி நாம் கடந்த வாரம் சில குறிப்புக்களைச் சுருக்கமாகச் சொல்லி இருந்தாலும், இந்த நாட்களில் அவை பெரும் நெருப்பாக சுவளைவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. அதற்கான காரணங்கள் என்ன? இது பற்றிய புதிய தகவல்கள் என்ன என்று நமது வாசகர்களுடன் இப்போது பேச எதிர் பார்க்கின்றோம்.

முதலில் அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலின் ஐதேக. செயலாலளர் பாளித்த ரங்கே பண்டார தேர்தல்களை நடத்தாது ஜனாதிபதி ரணிலை தொடர்ந்து அதிகாரக் கதிரையில் வைத்துக் கொள்வது தொடர்பான கருத்து. இதற்கு முன்னரும் அதே ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களான வஜிர அபேவர்தனவும் இதற்குச் சமாந்திரமான பல கருத்துக்களைச் சொல்லி இருந்தார். அந்தக் கருத்துக்கள் அனைத்தும் நடைமுறையில் உள்ள ரணில் மாமனார் உருவாக்கிய 1978 அரசியல் யாப்புக்கே விரோதமானவை. அதனால் இப்படியான யோசனைகளை முன்வைக்கின்ற நபர்கள் முதலில் தம்மை உளவியல் மருத்துவப் பரிசோனைகளுக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று நாமும் விமர்சித்திருந்தோம்.

அப்படியான சில கருத்துக்களை சுருக்கமாகப் பார்போம். வஜிர:- இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஜனாதிபதி கதிரையில் இருக்க வேண்டும். 2048ல் ரணில் உலகில் முதல்தர நாடாக இலங்கையை மாற்றி விடுவார். ஜனாதிபதித் தேர்தல் 2024ல் நடந்தால்  ரணில் நூறு (100) இலட்சம் ஒரு -கோடி வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அதே போன்று சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடத்தாமல் ரணிலுக்கு ஐந்து வருடங்கள்… பின்னர் இல்லை… இல்லை இரண்டு வருடங்கள் கொடுக்க வேண்டும் இதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி அணுரகுமாரவின் தேசிய மக்கள் என்ற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று மிரட்டும்-கட்டளையிடும் தோரணையில் இதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் வருகின்றது என்றும் ரங்கே சொல்லி இருந்தது!.

அதிகாரித்தில் இருக்கின்ற ஜனாதிபதியின் கட்சி செயலாளர் இப்படி யாப்புக்கு விரோதமாகக் கருத்துத் தெரிவித்திருந்தது ஒரு பாரதூரமான குற்றம் என்று நாம் கடந்த வாரமே சொல்லி இருந்தோம். அப்போது இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இது பற்றி ஐதேக. முக்கியஸ்தர்களான நவின் திசாநாயக்க, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் இது முட்டால் தனமான கருத்து என்று தமது கண்டணங்களைத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் இப்படி ஒரு பாரதூரமான கருத்தை ஜனாதிபதி ரணிலுக்குத் தெரியாது  செயலாளர் ரங்கே ஒரு போதும் வெளியிட்டிருக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அப்படியானால் இந்தக் கருத்து ஏன் சந்தைக்கு விடப்பட்டது என்று இப்போது பார்ப்போம். இப்படியான ஒரு கருத்தை முன்வைத்தால் அதற்கு ஆளும் தரப்பில் இருக்கின்ற எத்தனை பேர் ஆதரவாக (ரணிலுக்கு) வாக்காளத்து வாங்குகின்றார்கள். அவர்களையும் வைத்துக் கொண்டு சஜித் கட்சியில் இருக்கின்ற ரணில் விசுவாசிகள் சிலரையும் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் சில சலுகைகளையும் கொடுத்து அவர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியுமா? என்று ஒரு குத்து மதிப்பை இதில் அளந்து பார்த்து அடுத்த கட்டத்துக்குப் போவது.!

President Ranil Wickremesinghe leaves for Switzerland on official visit

இப்படியான வேலைகளுக்கு சிங்களத்தில் ‘முட்டியைப் போட்டு பார்த்தல்’ என்று ஒரு வார்த்தை இருக்கின்றது. இந்த முட்டியைப் போட்டுப் பார்க்கும் விடயத்தில் ராஜபக்ஸாக்களின் கரமும் மறைந்து விளையாடியதோ என்று நமக்கு ஒரு சின்ன சந்தேகமும் இருக்கின்றது. அவர்கள் அரசியல் கலாச்சராம் அப்படித்தான்.! வெளியில் இதற்கு மாற்றமாக ஜனநாயகக் காவலர்களாகதான் அவர்கள் காட்சி தருவார்கள்!

பொதுவாக இப்போது அனைத்துத் தரப்பினரும் ரங்கே கருத்துக்கு செம அடி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் நாம் கேட்பது பொறுப்பான ஒரு பதவியில் இருக்கின்ற தேசத் தலைவரின் கட்சி ஏன் இப்படி சட்ட விரோத கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கின்றது. இது எந்த வகையில் தார்மீக செயல்? இப்படி ஒரு கொடூரமான ஜனநாயக விரோத கோரிக்யை விடுவதற்கு அவர்களுக்கு என்ன அதிகாரம்  என்பது எமது கேள்வி.

கருவில் இருக்கின்ற சிசுவுக்குக் கூட உணர முடிகின்றது எந்தத் தேர்தல் வந்தாலும் ரணில் தரப்புக்கு வாய்ப்போ கிடையாது என்பது. ஆனால் தமிழ் தலைவர்கள் சிலருக்கு இது இன்னும் புரியமால் ரணில் விசுவாச அரசியலுக்காக தமிழர்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்! சமூக விமோசனத்துக்காக போராடுகின்ற கட்சிகளுக்கு இது எந்தவகையிலும் ஆரோக்கியமானதல்ல என்பது எமது கருத்து.

அனைத்து அரசியல் கட்சிகளும் போல இதற்குத் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருக்கின்றன. முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ரங்கே போட்ட முட்டியை தூள் தூளாக தர்த்துப் போடுங்கள். அந்தப் பேச்சுக்கே இடம் கொடுக்காதீர்கள். நானும் தெருவுக்கு வருகின்றேன்.  இது முற்றிலும் ஜனநாயக விரோத கருத்து என்று தனது கருத்தை ஊடகங்களில் பதிந்திருக்கின்றார். எதிர்ப்பு கடுமையாகும் போது “ரங்கே தனது தனிப்பட்ட கருத்தைத் தானே சொல்லி இருக்கின்றது.! ஏன் இதனை தூக்கிப் பிடிக்கின்றீர்கள்” என்று ரணில் தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கில்லி விடவும் இடமிருக்கின்றது. என்றாலும் பொது மக்கள் விளிப்புடன் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஐதேக.வுக்கு இருப்பது ஒரு ஆசனம்-வஜிர அபேவர்தன அவர் பிரோணைக் கொண்டு வரும் போது யாரும் அதனை ஆமேதிக்க மாட்டார்கள் என்று பலர் இப்போது பேசி வருகின்றார்கள். ஆனால் நாம் அப்படி எதிர்பார்க்கவில்லை நமது நாடாளுமன்றத்தில் ஒரு வாகானப் பேர்மிட்டுக்கும் கள்ளுக் கடை (பார்) லைசனுக்கும் வாக்களிக்கின்ற உறுப்பினர்கள் குவியலாக இருக்கும் சபையில் ஒன்று இரண்டு கோடிகளை கையில் வைத்தால் அங்கு பிரேரணையை பிரேரித்து ஆமோத்திதும் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கின்றது. இன்னும் சில கோடிகளைக் அதிகம் கொட்டி விட்;டால் தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கூட இவர்கள் நெருங்கவும் இடமிருக்கின்றது.

Parliament of Sri Lanka - News - Parliament Building at Diyawanna completes 40 years

இதனை நாம் நையாண்டியாக-குத்துக் கதைக்காக இங்கு சுட்டிக் கட்டினாலும் இதில் யதார்த்தம் ஒன்று இல்லாமல் இல்லை. இதற்கு முன்னர் தனித்துவம் பேசிய தலைவர்களின் சிறுபான்மை உறுப்பினர்களே சமூக விரோத பிரேரணைகளுக்கு நிறையவே வாக்குகளும் கொடுத்து இருக்கின்றார்கள்.!

நமது அரசியல் தலைமைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கு இந்த விளையாட்டு நன்றாகத் தெரியும். சிறுபான்மை பெரும்பான்மை அனைவருக்கும் நமது குத்துப் பொருந்தும். சமூக விமோசனம் பற்றி சிறுபான்மை தலைவர்கள் தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டை செய்வதால்தான் நாம் குத்த வேண்டிய இடங்களில் சற்று அதிகம் குத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதனால்தான் இருநூற்றி இருபத்து ஐந்து (225) பேரையும் அடித்துத் துரத்திப் போடுங்கள் என்ற கோசம் எல்லா இடங்களிலும் இப்போது உரக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

JUNE 06: அணுர-சஜித் விவாதம்!

Keeping Political Discussion Civil at Work | Exude

கடும் கண்டனத்துக்கு இலக்கான விவகாரத்தை  நாம் பார்த்தோம். இப்போது நாட்டு மக்கள் கடும் ஆவலுடன் அல்லது ஒரு எதிர்பார்ப்பில் இருக்கின்ற செய்திப் பற்றி பார்ப்போம். நமது நாட்டில் இது வரை ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடியாக விவாதங்களில் கலந்து கொண்ட காட்சிகள் இதுவரை நிகழ்தது கிடையாது. அதுவும் பிரதான போட்டியாளர்கள் என்ற நிலையில் இருக்கின்றவர்களிடம் நடக்கின்ற விவாதம் என்றால் இந்த நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் பலத்த எதிர்பார்ப்பு குடிகள் மத்தியில் ஏற்படுவது இயல்பானதுதான்.

இதன் அடிப்படையில் ஊடக மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு மேலோங்கி இருக்கின்ற இந்த காலத்தில் அதற்கான பரப்புரைகளும் யுக்திகளும் உச்சம் தொடுவதும் இயல்பானதுதான். இந்த விவாதம் தொடர்பான கதை தூங்கிக் கிடந்த சிங்கத்தை சீண்டி விட்டது போல ஒரு செயலாக அமைந்து விட்டது.  சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் பண்டார விட்ட வாய் வீச்சுத்தன் இதற்கு அடிப்படை.

Radical change in political culture vital for transformation – Anura Kumara Dissanayake - Lanka Focus

தனது சகாக்கள் சில சமயங்களில் தன்னை சிக்களில் மாட்டி வேடிக்கை பார்க்கின்றார்கள் என்று சஜித் நொந்து கொண்ட சந்தர்ப்பங்களும் இது விடயத்தில் இருக்கின்றது. நமது கணிப்புப்படி கணிசமான சமூக ஊடகங்கள் அணுர குமாரவுக்கு சார்பாக இருக்கின்றது. இதில் நடுநிலை என்று சொல்லிக் கொள்பவைகளும் நிறையவே இருக்கின்றன. அவர்களின்-அவற்றின் தொழிநுட்பங்கள் சஜித் தரப்பை விட வலுவாக இருக்கின்றது.

அத்துடன் தனது அணிக்குள் நடக்கின்ற சில செயல்பாடுகள் சஜித்துக்கு வாய்ப்பாக இல்லை. புதிய வரவுகள் தொடர்பாக கிரியெல்ல போன்ற சிரேஸ்ட தலைவர்கள் கூட தலைவருக்குக் கட்டுப்படுவதாக இல்லை. அது அவர்களது தன்னல அரசியல். குழு நிலை விவாதம் (சஜித்-அணுர) என்ற இசுவை எடுத்துக் கொண்டால் அதற்கு யார் போவது என்ற விடயத்திலும் இணக்கப்பாடு இல்லை. ஒரு தொலைக் கட்சி நிகழ்வில் ஒருவர் ஒரு கருத்தை பேசும் போது அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை அடுத்தவர் மற்றும் ஒரு நிகழ்ச்சியில்  பேசிக் கொண்டிருக்கின்றார். அதனால்தான் அணுர தரப்பினர் இந்தக் கதைகளைச் சொல்லி ரணிலை கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Opposition Leader Sajith Premadasa Faces Backlash for Opposing PickMe and Uber Taxis at Katunaike Airport

மேலும் சஜித் அரசு அமையுமாக இருந்தால் அதில் அமைச்சுப் பெற்றுக் கொள்வதில் சஜித் அணிக்குள் ஆளை வெட்டிக் கொண்டு அங்கு கடும் போட்டி. இதில் முன்னணியில் கொழும்பு சிறுபான்மை உறுப்பினர் செயல்பாடுகளையும் காண முடிகின்றது. அந்த வகையில் நமக்கு சஜித் மீது ஒரு அனுதாபம் தான் வருகின்றது.

மரத்தால்  விழுந்தவனை மாடு மோதிய கதைதான் இது. நாடாளுமன்த்தில் இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும் பாலானவர்கள் ஊழல் பேர்வழிகள்தான் இதனை அவர்களுடன் மனம் விட்டுப் பேசி நான் அறிந்து கொண்டேன் என்று தன்னை ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்று சொல்லிக் கொள்ளும் திலித் ஜயாவீர சில தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார். எனவே சஜித் எதிரிகளிடம் காசு வாங்கிக் கொண்டு கட்சிக்குள் சிலர் குழப்பங்களை உண்டு பண்ணுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

சரி பிழைகளுக்கு அப்பால் பார்க்கும் போது நாட்டில் இருக்கின்ற அரசியல் தலைவர்களில் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்லெண்ணம் இருக்கின்றது. இது வாரிசு ஊடாக அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்பதிலும் மாற்றுக் கருத்தும் கிடையாது.

இப்போது வருகின்ற ஆறாம் (6) திகதி சஜித்-அணுர விவதம் என்று சஜித் தரப்பிலே திகதி சொல்லப்பட்டது. ஆனால் அதில் அவர் கலந்து கொள்ள வேண்டும். கூடாது என்று கட்சிக்குல் குழப்பங்கள் தொடர்கின்றன. அத்துடன் கட்சிக்குல் இருக்கின்ற பலர் சஜித்துக்குப் பெரும் மன உலச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று தேர்தலில் சஜித்துக்கும் அணுராவுக்கும் தான் போட்டி. எனவே அவர்கள் இருவரும் களத்தில் சந்திப்பது நாட்டு மக்களுக்கு ஒரு அரும் அரசியல் அனுபவமாக இருக்கும். இதிலுள்ள புதிய கதை என்ன என்று பார்த்தால் நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் சஜித் அணியில் இருக்கின்ற எரான் விக்கிரமரத்தன இப்போதைக்கு இந்த விவாதம் தேவையில்லை.

தேர்தல் அறிவிப்பு வந்து வேட்பு மனுத் தாக்கள் செய்யப்பட்ட பின்னர் அதனைப் பார்க்கலாம் என்று கூறி ஏற்பாடாகி இருந்த விவாதத்துக்கு ஆப்பு வைத்திருக்கின்றார். அவரது இந்தக் கருத்து  மக்கள் மத்தியில் சஜித் இமேஜூக்கு காயங்களை உண்டு பண்ணக் கூடும். எனவே இந்த விவகாரத்தில் தலைவருக்கு உறுப்பினர்கள் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதுதான் எமது ஆலோசனை.

இந்த விவாத விவகாரத்தில் நாம் பெரிதாக ஜேவிபி தலைவர் அணுரா குறித்து அதிகம் பேச வேண்டிதில்லை. அவர்தான் இன்று நாட்டில் இருக்கின்ற நம்பர் வன் வாதக்காரன் அதானல் அவர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றார்கள். நேரம் கெட்டு விட்டால் ஆமை முயல் கதைகூட இதில் நடந்து முடியலாம்.

ஜேவிபி. காரர்கள் மீது இருக்கின்ற அடுத்த குற்றச்சாட்டு அவர்களுக்கு அனுபவம் கிடையாது என்பதாகும். அப்படியாக இருந்தால் சஜித் எப்போதாவது இதற்கு முன்பு ஜனாதிபதி பிரதமர் தொழில் பார்த்திருக்கின்றார்களா என்று அவர்கள் திருப்பிக் கோட்கின்றார்கள். அப்படியாக இருந்தால் இது அனுபவமும் அறிவும் சார்ந்த ஒரு விவாதமாக இருந்து விட்டுப் போகட்டுமே.

நன்றி: 02.06.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

முஸ்லிம் மாணவிகளின் A/L பெறுபேறு இடைநிறுத்தம் - இனப் பாகுபாட்டின் உச்சம்!

Next Story

கருத்துக்கணிப்பு எப்படி நடக்கிறது? வெவ்வேறு முடிவுகள் ஏன்?