அரசியல் கோமாளிக் கூத்துகள்!

-நஜீப்-

ரணிலுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று  ஐதேக. செயலாளர் ரங்கே பண்டார கேட்டிருக்கின்றார். ரங்கே அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி ரணில் கட்சியைப் பிரதிநிதி. அந்தக் கட்சி செயலாளர் தேர்தல் விதிகளுக்கு முரணான ஒரு சிந்தனையை மக்கள் மத்தியில் விதைப்பது எந்த வகையில் ஏற்புடையது.

Range Bandara invites key SJB MPs to rejoin party | Daily FT

அதே நேரம் அதற்கு ஒரு நாள் முன்னதாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வருட இறுதியில் முதலில் ஜனாதிபத்த தேர்தல் தான் வரும் என்று ரணில் கூறி இருந்தார். இது என்ன முரன்பாடு.? உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்து அதற்காக பரப்புரை நடந்து வந்த நாட்களில் தனது செல்பாடுகளுக்காக தலைவர் அதிகாரத்தக்கு வரும் போது தனக்கு  அமைச்சுத் தர வேண்டும் என்று பொது மேடையில் சிறுபான்மை உறுப்பினர் ஒருவர் சஜித்தைக் கோட்டிருந்தார்.

இப்போது விவாதக் கதை வைரலாக இருப்பதால் அதே ஆள் கட்சி சார்பில் அணுரவுடன் நகர அபிவிருத்தி  விவாதத்தில் தான் வருவதாக கூறுகின்றார். கட்சி முக்கியஸ்தர் ஒருவரின் இது கட்சித் தீர்மானமா என்று நாம் கேட்ட போது. தலை நகரில் சிறுபான்மை அமைச்சை முன் கூட்டி ‘ரிசேவ்’ பண்ணத்தான் இந்த வேகம் என்றார். மலையக  தலைவர் ஒருவரும் என்பிபி. அரசு வந்தால் நானும் அமைச்சர் தான் என்று சொல்லி இருந்ததும் தெரிந்ததே.

நன்றி: 25.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கான்ஸ் திரைப்பட விழா: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ...

Next Story

தேர்தல்: அவசரம் மௌனம் புதிர்கள்!