மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது எப்படி: உங்கள் வாழ்க்கையின் லீடர் நீங்கள்தான்.!

இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் கடைசி இரண்டு சுற்றுகளில் அளித்த பதில் காரணமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பதில் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.. 21 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்துள்ளது. 70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இந்த முறை இஸ்ரேலில் இருக்கும் எலியாட்ஸ் பகுதியில் நடைபெற்றது.

சரி ஹர்னாஸ் இந்த பட்டத்தை எப்படி வென்றார் என்று பார்க்கலாம். பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தின் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு கடைசியாக 16 பேர் நேரடி சுற்றுக்கு தயார் ஆனார்கள். இந்திய அளவில் உள்ளூர் போட்டிகளில் வென்றதன் மூலமும், ஸ்பான்ஸர்ஷிப் மூலமும் ஹர்னாஸ் கவுர் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். 16 பேர் இதில் மொத்தமாக தேர்வான 16 பேருக்கு இடையே

நீச்சல் உடை போட்டி,

கவுன் போட்டி,

மாடல் வாக் போட்டி,

தனிப்பட்ட இன்டர்வியூ போட்டி

உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு போட்டியிலும் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் 16 பேர் 10 பேராக குறைக்கப்பட்டு அவர்கள் 5 பேராக குறைக்கப்படுவார்கள். அந்த வகையில் ஹர்னாஸ் 5 பேர் கொண்ட சுற்றுக்கு புள்ளிகள் அடிப்படையில் தேர்வானார். போட்டிகள் அதன்பின் இரண்டு கேள்வி பதில் சுற்று நடக்கும். இதில் 5 பேர் கொண்ட சுற்றில் காலநிலை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள், அதை பொய் என்று கருதுகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த, ஹர்னாஸ், காலநிலை மாற்றம் என்பது உண்மை. இந்த இயற்கை படும் இன்னல்களை பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது. மோசமான நடத்தை நம்முடைய மோசமான நடத்தை காரணமாக இயற்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முறையாவது நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, செயலில் இறங்க வேண்டும். ஏனென்றால் நாம் ஒவ்வொருவரின் செயலும் இயற்கையை காக்கவோ, அழிக்கவோ போகிறது. எனவே நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம் ஏற்பட்ட பின் அதை சரி செய்வதை விட, அதை முன் கூட்டியே தடுப்பதே சிறப்பானதாக இருக்கும். அதைத்தான் நான் சொல்ல முயல்கிறேன், என்று ஹர்னாஸ் பதில் அளித்தார்.

இந்த பதில் காரணமாக அவர் 3 பேர் கொண்ட சுற்றுக்கு தேர்வானார். இதில் தென்னாப்பிரிக்கா, பெருகுவே நாட்டு அழகிகளுடன் அவர் மோதினார். இதுவும் கேள்வி பதில் சுற்றுதான். இதில் இப்போது இருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் பிரஷரை எதிர்கொள்ள என்ன மாதிரியான அறிவுரையை வழங்குவீர்கள் என்று கேட்கப்பட்டது. ஹர்னாஸ் கவுர் சந்து இதற்கு பதில் அளித்த ஹர்னாஸ், இளம் தலைமுறை எதிர்கொள்ளும் பெரிய பிரஷர் என்பதே அவர்கள் தங்களை நம்பாததுதான். சுய நம்பிக்கை அவசியம். நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நம்ப வேண்டும்.அதுவே உங்களை அழகாக்கும். உங்களிடம் மற்றவருடன் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

உலகம் முழுக்க நடந்து வரும் பெரிய பெரிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வெளியே வாருங்கள். உங்கள் குரலை வெளியே தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக நீங்கள்தான் பேச வேண்டும். ஹர்னாஸ் கவுர் சந்து அளித்த பதில் உங்கள் வாழ்க்கையின் லீடர் நீங்கள்தான். நான் என்னை நம்பினேன்.. அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்.

உங்களுக்கான குரலாக நீங்களே இருக்க வேண்டும், என்று ஹார்னஸ் குறிப்பிட்டார். இவர் அளித்த இந்த பதில்தான் அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைக்க முக்கிய காரணமாக அமைந்தது. மற்றவர்கள் அளித்த பதிலை விட இது சிறப்பாக இருந்ததால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Previous Story

தென் ஆப்பிரிக்க அதிபருக்கு ஓமிக்ரான்?

Next Story

சமூகத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் - இம்ரான் Mp