ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் ஐநாவையே பதம் பார்த்த இஸ்ரேல்!

கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை.

காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள் போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில் தமிழ்நாடு இல்லை..

Israel spells out accusations against UNRWA workers linked to Hamas attack

சேலத்தில் ஸ்டாலின் பேச்சு மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டுவரும் போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம் வெற்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரம், இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.

இதனால் சுமார் 31,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டிணியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்து பொருட்கள் எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெரமி இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். போதைப்பொருள் சப்ளையே குஜராத் வழியாகத்தான்.. பாஜக ஆளும் மாநிலங்கள் ‘டாப்’.. மோடிக்கு ஸ்டாலின் பதிலடி! இந்நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தெற்கு லெபனானில் நடைபெற்றிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தாலும், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் தொடர்ந்து மோதி வருகிறது. எனவே இந்த தாக்குதலின் போது ஐநா அதிகாரிகள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஐநாவின் பார்வையாளர்களை குறி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படை அதிகாரிகள் கூறிள்ளனர். ஆனால், இந்த தாக்குதல் குற்றச்சாட்டை இஸ்ரேல் முற்றிலுமாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

தேர்தல்களில் முஸ்லிம்கள் நிலை என்ன?

Next Story

ஆப்கன்: கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களை கல் எறிந்து கொல்லலாம்.!