பாததும்பற ஐதேக. வலய அமைப்பாளராக M.H.Mமுபாரக் நியமனம்

2024-இந்த ஆண்டு நாட்டில் தேர்தல் வருடமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்காகத் தன்னைத் தயார் செய்து வருகின்றன.

ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய வியூகங்களுடன் தனது தேர்தல் நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்திருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிலுள்ள தேர்தல் தொகுதிகளை பல வலயங்களாகப் பிரித்து அதற்கு தமது அமைப்பாளர்களைத் தற்போது நியமித்து வருகின்றது.

RW tells party seniors he will not remain UNP Leader for long

கண்டி மாவட்டம் பாததும்பறை தேர்தல் தொகுதி ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு அமைப்பாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி நியமனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாததும்பறை பிரிவு மூன்றுக்கு உடதலவின்னையைச் சேர்ந்த எம்.எச்.எம். முபாரக் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இதற்கான நியமனக் கடிதம் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார அவர்களின் கையொப்பமிட்டு அவருக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது.

Range Bandara to continue as UNP general secretary

குடித் தொகை செறிவாக இருக்கின்ற இந்த வலயத்தில்
06.  உடதலவின்ன மடிகே
07.  உடதலவின்ன
08.  பல்லேதலவின்ன
12.  கஹல்ல
13.  பொல்கொல்ல
15.  மடவல மடிகே
16.  மடவல

ஆகிய உள்ளூராட்சி வட்டாரங்கள் அடங்கி இருக்கின்றன. எம்.எச்.எம். முபாரக் களைக்கப்பட்ட பாததும்பறை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Story

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில்  சவுதி அழகி!

Next Story

தேர்தல்களில் முஸ்லிம்கள் நிலை என்ன?