ரணில்-பசில் கயிறிழுப்பு!

-நஜீப்-

 

376 Tug War Team Stock Video Footage - 4K and HD Video Clips | Shutterstock

பசில் நாட்டுக்கு வந்தது முதல் அரசியல் களம் சூடேறி வருகின்றது. முதலில் பொதுத்; தேர்தலை நடாத்தினால் ஒரு கௌரவமான நிலை தேர்தலில் வரும் என்று பசில் நம்புகின்றார். ஆனால் அதற்கு ஜனாதிபதி ரணில் தயாராக இல்லை. அவரது நகர்வுகள் ஜனாதிபத் தேர்தல்.

அதில் தான் வேட்பாளர் என்று எண்ணிக் கொண்டுதான் மனிதன் காய் நகர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் ராஜபக்ஸாக்களின் அழுத்தம் இப்போது பொது தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்பதாக இருக்கின்றது. அப்படியாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் 113 பேரின் கையொப்பதுடன் தனக்கு ஒரு கடிதத்தை தயாரித்து தந்தால் அது பற்றி யோசிக்கலாம் என்று ரணில் பசிலுக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்.

President, MR, Basil to discuss possible alliance for polls - LankaXpress

மொட்டுக் கட்சியில் இந்தத் தொகையை சம்மதித்து கையொப்பம் பெறுவது இலகுவான காரியமாக இருக்காது. இதனால் தனக்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொள்ள பசில் சஜித்துடன் இரகசிய சந்திப்பொன்றை கடந்த வாரம் நடாத்தினார் என்று ஒரு தகவலும் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதன் நம்பகக்தன்மையை எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சந்திரிகா விரக்தியில் ஓட்டம்!

Next Story

ஜனாதிபதித் தேர்தலில் தமிழருக்கான அரிய வாய்ப்பு