பொது எதிரி யார்! 

-நஜீப்-

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான விவாதத்தில் நிமல் சிரிபால டி சில்வா பேசுகின்ற  போது பொது எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் எமது தனிப்பட்ட முரண்பாடுகளை மறந்து ஒராணியில் திறள வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

பொது எதிரி என்று ஜேவிபி.யைத் தான் இலக்கு வைத்து அவர் பேசி இருக்கின்றார். அதே போன்று சஜித் அணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவதில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்று சஜித் அணி அர்ஷத டி சில்வா பேசி இருக்கின்றார்.

Lanka NewsWeek - Basil hijacked Sajiths SJB

பசிலும் சஜித் தரப்புடன் ஒராணில் இணைந்து அரசியல் செய்வதில் தமக்கு பெரும் தடைகள் எதும் கிடையாது என்று பகிரங்கமாக ஊடகங்கள் முன் பேசி இருந்தார். எனவே நாம் சில வாரங்களுக்கு முன்னர் சுட்டிக் காட்டி இருந்த மெகா கூட்டணி ஒன்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே தெரிகின்றது.

அனுராவிடம் சரணடைவதை விட மெகா கூட்டணி போட்டாவது தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்

குரலின் குறுச் செய்திகள்-10

-நஜீப்-

An Open Letter to Mahinda Rajapaksa | Tamil Guardian

(தற்போது அரசியல் களம்  சூடேறி வருவதால் நமது வாராந்த செய்திப் பக்கத்துக்கு நிறையவே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த வாரம் முதல் இந்தப் பகுதியில் அவற்றை குறுஞ் செய்திகளாக இங்கு பதியலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.)

1.ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எவரும் வாய்திறக்கக் கூடாது என்று மஹிந்த ரஜபக்ஸ மொட்டுக் கட்சியனருக்கு கண்டிப்பான உத்தரவு.

2.வருகின்ற ஏப்ரல் 4ம் தகதி சஜித் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாரிய கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கின்றது

3.மலையத்தில் உள்ள ஒரு பிரபல அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் என்பிபி.யுடன் இணைந்து பயணிக்க பேச்சு வார்த்தை.

4.முஸ்லிம்கள் மத்தியில் என்பிபி. செயல்பாடுகளை துரிதப்படுத்தும் ஒரு வேலைத் திட்டம். புனித நோன்பு முடிய  துவங்கும் என அதன் முக்கியஸ்தர் ஒருவர் நமக்குக் தகவல்.

Ready to steer the country for six months - MP Anura Kumara Dissanayake - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka

5.ஈசல்கள் புற்றிலிருந்து வருவது போல அரசியல் களத்தில் இப்போது கருத்துக் கணிப்புக்கள் வருகின்றன. இவற்றின் நம்பகத் தன்மையில் நிறையவே குழறுபடிகள்.

6.கோப் கமிட்டிக்கு ரோஹித்த அபேகுனவர்தன நியமனம் செய்தது ஒரு அரசியல் வன்முறையாகத்தான் பார்க்க வேண்டும்- அனுரா குமார

7.இப்போது தேர்தல் முறையை மாற்ற முயற்ச்சி செய்து வருகின்ற தேர்தல்களைத் தள்ளிப் போட முடியாது -மஹிந்த தேசப்பிரிய

8.மொட்டுக் கட்சி செல்வாக்கு ஒரு கட்டத்தில் நூற்றுக்கு இரண்டு சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சியடைந்திருந்தது -எஸ்.பீ.திசாநாயக்க

9.தற்போது கனடாவுக்கு போய் இருக்கின்ற ஜேவிபி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க அங்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனமொன்றை வெளியிடுவார் என நம்பப்படுகின்றது.

10.அண்மையில் மொட்டுக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. அந்த இடத்துக்கு உதயங்க வீரதுங்க வர அவருடன் சண்டைக்கு போய் இருக்கின்றார் ரணில் விசுவாசி பிரசன்ன ரணதுங்ஹ.

நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கல்வி அமைச்சின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு சாதகமாக  தீர்மானம்

Next Story

107 பேரின் உயிரை பறித்த மாஸ்கோ தாக்குதல்