கோட்டா நூலுக்கு பதிலடி!

-நஜீப்-

கோட்டாவின் சிங்களப் பௌத்த இருப்பை இல்லாதெளிக்க நான்  காரணமாக இருந்ததாக அவர் தனது பெயரைச்  சொல்லி புத்தகத்தில் குறிப்பிட்டிக்கின்றார் என ஓமல்பே சோபித தேரர் தெரிவிக்கின்றார். தேரர் கருத்துப்படி கோட்டா ஒரு நன்றி கெட்ட மனிதன்.

Think about people's lives before you think about the election...

நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலமையின் போது அவர் பாதுகாப்பாக தப்பிப் போக நான் விமான நிலையம் வரை சென்றேன். இதனை அவருக்கு நெருக்கமாக இருந்த சுவிஸ்வரர் போன்றவர்கள் நன்றாக அறிவர்ள் என்று கூறி தனது ஆதங்கத்தை ஒரு ஊடகச் சத்திப்பில் கொட்டி இருக்கின்றார் இந்த ஓமல்பே சேபித்த தேரர்.

Celebrating the life and service of Ven. Dr. Omalpe Sobitha Thera: Adored for his relentless service to Buddhism and Nation | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

அத்துடன் அவர் குறிப்பிடுகின்ற படி அவர் பதவி கவிழ்க்கப் பட்டதற்கு காரணம் வெளிநாட்டுச் சக்திகளோ அல்லது உள்நாட்டுச் சக்திகளோ அல்ல. அவரே தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். இந்த அரசாங்கத்தின் பிழையான பொருளாhதர நடவடிக்கைகளின் காரணமாகத்தான் இப்படி ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டது.

இதற்கு மொட்டுக் கட்சியினர்தான் பொறுப்புக் கூறி வேண்டும் என்றும் தன் மீதான கோட்டா குற்றச்சாட்டுக்களுக்கு ஓமல்பே சேபித தேரர் பதில் வழங்கி இருக்கின்றார்.

நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

கோட்டா புத்தகமும் பசிலின் தேர்தலும்!

Next Story

இந்தியா:நாடாளுமன்ற தேர்தல்: ஏப்ரல் 19 முதல் 7