ஜனாதிபதி உவிந்து விஜேவீர!

-நஜீப்-

நமது நாட்டில் ஜனரஞ்சகமாகப் பேசப்படுகின்ற புரட்சிகர அரசியல் தலைவர் ரோஹன விஜேவீர. அவருக்கு உவிந்து விஜேவீர என்று ஒரு மகன். இவர் அவ்வப்போது சமூக ஊடங்களில் பேசப்படுகின்றார்.  தந்தையைப் போன்று இவரும் தனது மேல் படிப்டை ரஸ்யாவில் தான் தொடர்ந்தார்.

SLPP MP queries mysterious death of JVP Leader Wijeweera in custody – The Island

ஒரு முறை தந்தையின் எல்லா அரசியல் செயல்பாடுகளையும் தான் ஏற்கத் தயாராக இல்லை என்று ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில் கருத்துச் சொல்லி இருந்தார். அண்மையில் அணுரவின் இந்திய விஜயம் தொடர்பாகவும் அவர் விமர்சனம் செய்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

அணுராவின் அரசியல் எதிரிகள் விஜேவீரவின் மகன் உவிந்துவை  ஜனாதிபதி வேட்பாளராக களத்துக்குக் கொண்டுவர பெரும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தகவல். ஆனால் இதற்கு இன்னும் உறுதியான எந்தப் பதிலையும் உவிந்து அவர்களுக்குக் கொடுக்கவில்லை.

ஜேவிபி வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு கட்சி அல்ல. எனவே இந்த உவிந்து பற்றிய கதையைக் கண்டு அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அப்பனுக்கு பிள்ளை கொடுக்கும் மரியாதையை நாம் அரசியலில் விரையில் பார்க்க முடியும்!

நன்றி: 18.02.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலகின் பெரிய பொருளாதாரம் -2024 SRI LANKA ......?

Next Story

புதினை எதிர்த்த  அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்!