அமெரிக்கா சூறாவளி : பலி  120

Trees and debris cover the ground after a tornado tornado ripped through the Hattiesburg, Miss., area early Saturday, Jan. 21, 2017. Mayor Johnny DuPree has signed an emergency declaration for the city, which reported "significant injuries" and structural damage. (Ryan Moore/WDAM-TV via AP)

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில்120க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நேற்றில் இருந்து பல்வேறு மாகாணங்களை கொடும் சூறாவளி தாக்கி வருகிறது. சூறாவளி தாக்குதலால் பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்காவை தாக்கி உள்ள சூறாவளியால் கென்டகி மாகாணத்தில் மட்டும் சூறாவளி காரணமாக 35 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். முக்கியமாக நேற்று இரவு நேரத்தில் சூறாவளியின் தீவிரம் மிக அதிகமாக இருந்தது

5 மாகாணம்

ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிஸி மாகாணங்களிலும் சூறாவளி தாக்குதலால் மக்கள் பலியாகி உள்ளனர். கென்டகியில் மட்டும் 3 லட்ச இடங்களில் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். பலர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேதம்

200க்கும் மேற்பட்ட வீடுகள் 5 மாகாணங்களிலும் சூறாவளியால் சேதம் அடைந்துள்ளது. கென்டகியில் இருக்கும் மெழுகு உற்பத்தி மையத்தில் இந்த சூறாவளி தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலியானார்கள்.

இல்லினாய்ஸ்

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் கிடங்கில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்த 8 பேர் பலியானார்கள். அமெரிக்காவை தாக்கிய மிக்ப்பெரிய சூறாவளிகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் வரலாற்றில் மிகப்பெரிய சூறாவளியாக மாறும் வாய்ப்புகளும் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாணங்கள்

இந்த சூறாவளி வேகமாக பயணித்து 5 மாகாணங்களை தாக்கி உள்ளது. 400கிமீ வரை இந்த சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளது. கடைசியாக 1925ல் அமெரிக்காவை தாக்கிய சூறாவளி 355 கிமீ தூரம் சென்றது. அதன்பின் இப்போதுதான் சூறாவளி ஒன்று இவ்வளவு தூரம் பயணித்துள்ளது. இதனால் அமெரிக்காவை தாக்கிய நீளமான சூறாவளிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Previous Story

பாக். இடம் அமைதிப் பேச்சு:வேறு வழி இல்லை-பரூக் அப்துல்லா

Next Story

ரஜினிகாந்த் பிறந்தநாள்